TNPSC உதவி வேளாண் அலுவலர் தேர்வு சான்றிதழைபதிவேற்றம் செய்யலாம்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2019

TNPSC உதவி வேளாண் அலுவலர் தேர்வு சான்றிதழைபதிவேற்றம் செய்யலாம் 


உதவி வேளாண் அலுவலர் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை இன்றும் நாளையும் ஆன்லைனில் பதி வேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உதவி வேளாண் அலுவலர் தேர்வுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண் ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையத்தில் 25, 26 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) ஆன்லைனில் பதிவேற் றம் செய்யலாம். குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர் களுக்கு தேர்வுமுறையில் விருப்ப மில்லை என கருதி அவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன

The candidates who have been admitted provisionallyfor the Ist Phase of certificate verification/counselling scheduled to be conducted on 28.06.2019 FN & AN for the post ofAssistant Agricultural Officer. The Certificate verification/counselling is to be conducted on thesame day at the O/o.TNPSC, TNPSC Road, VOC Nagar, Chennai 600 003. Further the candidates are directed to upload the scanned original certificates on 25.06.2019 and 26.6.2019 through the listed E- Seva centres of TACTV. If any of the candidates has not attend the certificate verification/counselling on the above mentioned date it will be construed that he/she isnot interested to take part in the selection process and his/her application will not be considered for the above said post. The publication list, Notice for Certificate verification are available in the Commission’s website (www.tnpsc.gov.in) .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி