TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2019

TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று தொடக்கம்


தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான  முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. அதேபோன்று  23.8.2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15-ஆம்  தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத  4  லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.

இன்று தேர்வு: அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 8) முதல் தாள் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளன. இரு தேர்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடையும். தேர்வின் மொத்த மதிப்பெண் 150  என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

9 comments:

  1. New syllabus la erunthu questions vanthatha?

    ReplyDelete
  2. ஒரு ஒரு வினாவு பாரா பாராவாக இரூந்தது பழைய பாடம் தான்

    ReplyDelete
  3. Dear admin tet paper 1 question apload pannunga

    ReplyDelete
  4. Question papper update panunga paPper 1 kalvisaithi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி