ஆன்லைன் மூலம் பல்வேறு 'முறைகேடுகளுடன்' நடைபெற்ற கணினி பயிற்றுநர் TRB தேர்வை "ரத்து" செய்யவில்லையென்றால் அனைத்து தேர்வர்களும் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடர முடிவு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2019

ஆன்லைன் மூலம் பல்வேறு 'முறைகேடுகளுடன்' நடைபெற்ற கணினி பயிற்றுநர் TRB தேர்வை "ரத்து" செய்யவில்லையென்றால் அனைத்து தேர்வர்களும் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடர முடிவு..!!


இன்று (26-06-2019) சென்னை பள்ளி‌ கல்வித்துறை வளாகத்தில் இருக்கும் தமிழக "ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TRB Board)" ஆன்லைன் முறையில் பல‌‌‌ முறைகேடுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-06-2019) நடைபெற்ற "கணினி பயிற்றுநர் TRB தேர்வை" ரத்து செய்யக்கோரி கணினி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் போராட்டத்திற்கு போலிசார் அனுமதி மறுத்தனர். 

பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் "தலைவரிடம்" கணினி ஆசிரியர்கள் குழுவாக சென்று  கோரிக்கை மனுவை அளித்து "Online முறையில் நடைபெற்ற இந்த தேர்வின் அனைத்து குளறுபடிகளையும் விளக்கிக் கூறி அதனை மனுவாக அளித்தனர்"

தேர்வுக்காக வகுக்கப்பட்ட 10.00 -to- 1.00 என்ற தேர்வு நேரத்தை மீறி 2.00 மணி... 4.00 மணி... மற்றும் இரவு 8.00 மணி வரையில் தேர்வு நடைபெற்றதற்கான ஆதாரங்களை அவரிடம் சமர்ப்பித்தனர். 3 தேர்வு மையங்களுக்கு மட்டுமே மறு-தேர்வு நடத்தப்படுகிறது; ஆனால் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் சர்வர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து சில தேர்வு மையங்களில் இரவு 8.00 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இதனால் காலை 10.00 முதல் 1.00 மணி வரை தேர்வெழுதியவர்களிடம் மாலை 2.00 மணி... 4.00 மணிக்கு தேர்வெழுதியவர்கள் வினாத்தாளின் விடைகளை கேட்டறிந்து இந்த தேர்வை எழுதியுள்ளனர். இது மாபெரும் முறைகேடாகும்..!!

மேலும், தேர்வுக்கான வினாத்தாளை தேர்வர்களிடம் வழங்க TRB எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் விடைக்குறியீடு (Answers Key) வெளியிடப்பட்டால் நாங்கள் எழுதிய விடைகளை எவ்வாறு? சரிபார்ப்பது எனவும், ஆசிரியர் தகுதித்தேர்வின் விதிகள் இந்த தேர்வில் பின்பற்றப்படாததால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென TRB தலைவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த மனுவை படித்துப்பார்த்த TRB-யின் 'தலைவர்' தேர்வு மையங்களின் "CCTV" பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கணினி பட்டதாரிகளும் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடரவும்... குடும்பத்துடன் போராட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

22 comments:

 1. Pg trb friends. Nalai namakum yetha nilamai than.we dnt accept on line exam. We want omr exam pattern request to trb befote last date of application. On line exam like evm pattern.

  ReplyDelete
 2. Pg trb case poduga help panren matra nanparklum help pannuga. Bc bcm backlog sammnthamakaum online exam sammathagaum 6383422369

  ReplyDelete
 3. PG TRB ஆன்லைன் தேர்வை ரத்து செய்துவிட்டு, நேர்மையான முறையில் OMR விடைத்தாள் மூலம் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 4. naam exam eluthiyathukku endha proof um illamal poi vidum online exam il but trb exam only conduct for OMR SHEET ONLY

  ReplyDelete
 5. Conduct trb exam in omr sheet only

  ReplyDelete
 6. CS paduchavanukke TRB thani kattiduchu..other major guys kindly file case against TRB..otherwise IP spooping...

  ReplyDelete
 7. TRBஐ கலைத்து விட்டு TNPSC இடம் ஒப்படையுங்கள்.

  ReplyDelete
 8. Please omr marksheert conform pg examination

  ReplyDelete
 9. கவுண்டமணி சொல்லற மாதிரி நமக்கு என்னத் தெரியுமோ அதை செய்யுங்க தெரியாதையை செய்யாதீங்க

  ReplyDelete
 10. நண்பர்களே இந்தத் தேர்வு மட்டும் இல்லை இதற்கு முன்பு நடந்த சிறப்பு ஆசிரியர் தேர்வு அதற்கு முன்பு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அதற்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் அனைத்து தேர்வுகளையும் மிகப்பெரிய குளறுபடிகளை செய்துள்ளது இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வை நடத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி