வல்வில் ஓரி அரசு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம்தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த ஆண்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
Pg Trb economics 9600640918
ReplyDelete