10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு பாராட்டுவிழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2019

10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு பாராட்டுவிழா


தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் தேனி கலை இலக்கிய மையம்* இணைந்து 06.07.19 தேனி வாசவி மஹாலில் 
    தேனி மாவட்டத்தில் *10 மற்றும் 12 ம் வகுப்பு* அரசு பொதுத் தேர்வில்  *நூறு சதவீத  தேர்ச்சி* பெற்ற *அரசுப்பள்ளிகளின்* *தலைமையாசிரியர்கள்* மற்றும் தேர்ச்சிக்கு  உழைத்த பாட *ஆசிரியர்களை* *கௌரவிக்கும்                 💐பாராட்டுவிழா..*💐 நடைபெற்றது...

  இவ்விழாவில் மாவட்ட *வருவாய் அலுவலர்( DRO) திரு.கந்தசாமி  அவர்கள்,* மற்றும் *மதுரை மண்டல பல்கலைகழக இணைஇயக்குநர்(ஒய்வு) டாக்டர் கூடலிங்கம் , தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்து தற்போது ஒய்வு பெற்ற உயர்திரு.மாரிமுத்து அவர்கள்* *சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூறு சதவித தேர்ச்சி பெற்ற அரசுபள்ளிகளுக்கும், தலைமையாசிரியர்களுக்கும், பாட  ஆசிரியர்களுக்கும் , கேடயமும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கொளரவித்தார்கள்* .

இவ்விழாவில் தேனிமாவட்ட கல்வித்துறையில் நேர்மையான முதன்மைக்கல்வி அலுவலராக  செயல்பட்டு தற்போது ஒய்வு பெற்ற உயதிரு. *மாரிமுத்து* அவர்களுக்கு *நேர்மை மிகு கல்விச்சுடர் விருது* தேனிமாவட்ட வருவாய் அலுவலரால் (DRO) வழங்கப்பட்டது,

 அரசுப்பள்ளிகளை தானாக முன்வந்து வண்ணங்களால் கருத்துள்ள, விழிப்புணர்வூட்டிய  ஓவியங்களை வரைந்து அழகு படுத்தும்  சேவை செய்து கொண்டுள்ள *பட்டாம்பூச்சி* குழுவிற்கு *கல்விச்சுடர்* விருதும் வழங்கி கொளரவப்படுத்தப்பட்டது......

இந்நிகழ்வில் கலந்து கொண்ட 
 *தேனி மாவட்ட கல்லூரி,பள்ளி தாளாளர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்* , சமூக ஆர்வலர், நண்பர்கள் பொதுமக்கள் காலந்து கொண்டு சிறப்பு செய்தற்கு நன்றிகள் ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
 
By 
*THENI IAS ACADEMY*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி