தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2019

தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு


தமிழக அரசுப்பள்ளிகளில்  10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து  வருகிறது.

 இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் என்ற நிலை நீடித்து வருகிறது.எனவே, உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை பணி நிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்கு  மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக உபரி ஆசிரியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிய வந்தது. இவர்களை வேறு பள்ளிகளுக்கு கவுன்சலிங் மூலம் பணிநிரவல் செய்வதற்கான  முறையான அரசின் உத்தரவு கடந்த மாதம் 20ம் தேதி முடிவானது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம்  செய்யவும், மற்றவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம்செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

21 comments:

 1. Appo tet Paper1 pass panni wait panra enga nilamai enna. Eithukku exam vaikkiringa. Eintha ahitchi Eppo mudiumo appathan engalukku nalla kalam.

  ReplyDelete
 2. what about 2013 tet paper 1 passed candidates???!!!!many of us just missed our jobs in 0.05 to 1 mark difference.is der any chance???

  ReplyDelete
 3. Sgt surplus sollitu,bt ethuku podringa....2013,2017,2019 sgt podunga.

  ReplyDelete
 4. பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டம் பெற்றால் மட்டுமே அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு செய்கிறார்கள். ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும்,தகுதித்தேர்வும் தேர்ச்சி பெறாமல் அவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு பணியில் அமர்த்துவது சரியா?

  ReplyDelete
 5. Public do not have the trust in gov schools and they go in search of pvt institutions... expect few most of the teachers are not even eligible to work in a school... the current situation in gov school is because of these group of (so called) teachers. There are lakh's of eligible teachers who have cleared TET and waiting to server this society and the children... enough is enough... gov should take a decision and it should be NOW...

  ReplyDelete
 6. U stupids are always blaming teachers.do u have guts to fight for good infrastructure like private schools

  ReplyDelete
  Replies
  1. ஆமா அரசுப்பள்ளியில் சேர வந்த மாணவா்களுக்கு
   காசுகொடுத்து
   தனியாா்பள்ளிக்கு
   தமிழக அரசே அனப்புவதன்
   நோக்கம், அரசு பள்ளகளை அழித்தொழித்தல்,
   கல்வி தனியாா்மயம், முக்கியமாக ஏழைகள் படிக்கவே கூடாது!

   Delete
  2. இவனுங்களே இப்படி செஞ்சு நன்றாக படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்புவாங்க.
   தனியார் நல்ல ரிசல்ட் காட்டுவான். அப்புறண் எவன் அரசுப் பள்ளியில் சேருவான்

   Delete
 7. அரசு பள்ளிகளை அழித்தொழிக்காமல்
  விடமாட்டாா்கள், இந்த ஆட்சியாளா்கள்

  ReplyDelete
 8. I think that u haven't got govt job . that's y bcoz of jealous u r blaming teachers.what sin have the government teachers made?

  ReplyDelete
 9. There is no proper facilities in govt schools.most of the teachers are spending their own money for the government schools .but u people are always blaming the teachers?

  ReplyDelete
 10. In private schools a teacher's job is only teaching.but in govt schools they have many work related to education

  ReplyDelete
 11. Always u r saying there are so many Tet passed candidates waiting for job .if they enter into this govt job they also can't do without proper facilities.in many govt schools there is no proper water facility.teachers are buying water from panchayat office not free of cost but by spending their money

  ReplyDelete
 12. Govt is giving only 4000 rupees to govt schools to celebrate annual day.within this money how can the teachers celebrate annual day function?aadditionally they are spending their salary

  ReplyDelete
 13. Govt teachers are only employees and not govt builders.there is nothing in their hands.so u people realise their situations and then blame them

  ReplyDelete
 14. I thank to kalvisolai.... My best wishes....

  ReplyDelete
 15. டிஆர்பி சீனியாரிடாடி படி சர்ப்ளஸ் லிஸ்ட் தயாரிக்குனும்.
  இவங்க அதுல குளறுபடி பன்றாங்க.
  ஆறு வருடமா பள்ளிக்கு வராத ஒரு டீச்சர் எந்த லிஸ்ட்லயும் வராம பார்த்து காசு வாங்கிக்கிறாங்க.

  ReplyDelete
 16. அரசு பள்ளி ஆசிரியர் உபரி பணியிடம் கணக்கெடுத்து பத்திரிக்கையில் போட்ட அரசு தனியார் பள்ளிக்கு அரசு பள்ளி மாணவர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக தாரை வார்த்து கொடுத்ததையும் கணக்கெடுத்து போட வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி