உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக்கில் 19-க்குள் சேர்க்கை - kalviseithi

Jul 17, 2019

உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக்கில் 19-க்குள் சேர்க்கை


எஸ்எல்எஸ்சி உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஜூலை 19-க்குள் சேர்க்க வேண் டும் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கு நர் கே.விவேகானந்தன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை: ஸ்எஸ்எல்சி உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி ஆண்டிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடரும் திட்டம் கடந்த 2008 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடப்பு கல்வி ஆண்டுக்கு (2019-2020) ஜூலை 19-ம் தேதிக்குள் சேர்க்குமாறு பாலிடெக்னிக் கல் லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சேரும் மாணவர்களுக்கு வருகை நாட்களில் முதல் பருவத்துக்கு விதிவிலக்கு அளிக்காமல் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தி வருகை சதவீதத்தைஉறுதிசெய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி