2000 வார்த்தைகள் தேர்வு!'- அரசுப் பள்ளிமாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச செங்கோட்டையன் புது முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2019

2000 வார்த்தைகள் தேர்வு!'- அரசுப் பள்ளிமாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச செங்கோட்டையன் புது முயற்சி


''அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக சரளமாக ஆங்கிலத்தில் பேச, 2000 ஆங்கில வார்த்தைகள் தேர்வுசெய்யப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

விருதுநகரில் நடந்த கல்வித்திருவிழாவில் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜிதமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி, விருதுநகரில் கல்வித்திருவிழா நடைபெற்றதுஇதில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழக அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-18-ல் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புக்கான வகுப்பறைகள் செப்டம்பர் மாதத்திற்குள் கணினி மயமாக்கப்படும். விரைவில், 25 லட்சம் மாணவர்களுக்கு டேப் என்ற சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. 2 மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.

அதன் பின்னர், 10 ஆண்டுகள் அந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தை நோக்கி செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச்செல்வதற்கு உறுதுணையாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.கல்வித்திருவிழாவில் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜிஅடித்தட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எதிர்காலத்தில், மாணவர்கள் படிக்கும்போதே சரளமாக ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதற்கென பிரத்யேகமாக 2000 ஆங்கில வார்த்தைகளைத் தேர்வுசெய்து, மென்பொருள்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். இதன்மூலம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பேசக்கூடிய மாணவர்களை உருவாக்க முடியும். எனவே, வேலை தேடி பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் செல்லும் மாணவர்கள், சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும் எனத் தெரிவித்தார்.

1 comment:

  1. I can make the students to speak in English with in 30 days education department made me to sit at home why

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி