பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2019

பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்!


''தமிழகத்தில், 2,400 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.வேலுார், சத்துவாச்சாரியில், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில், 1,248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, தவறு. ஒரு மாணவர் கூட இல்லாத, 45 பள்ளிகளை, தற்காலிக நுாலகமாக மாற்றவும், அந்த பள்ளி ஆசிரியர்களை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதும், அந்த பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை மூலம், மாணவ - மாணவியருக்கு காலணி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதற்கு பதிலாக, 70 லட்சம் பேருக்கு, சாக்ஸ் மற்றும் ஷூ வழங்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.நடப்பாண்டில், 1 லட்சத்து, 68 ஆயிரத்து, 414 மாணவ - மாணவியர், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டை விட, சேர்க்கை சதவீதம் கூடுதலாகி உள்ளது. தற்போது, 2,400 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

நீண்ட காலமாக, ஆசிரியர்கள், கரும்பலகையில், சாக்பீஸால் எழுதி பாடம் நடத்துகின்றனர். விரைவில் இந்த முறை மாற்றப்பட்டு, ஒயிட் போர்டில், ஸ்கெட்ச் பேனாவால் எழுதும் முறை கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

21 comments:

  1. Neenga solrathulam Kanndippa nadakum nu nambitom

    ReplyDelete
  2. Neenga solrathulam Kanndippa nadakum nu nambitom

    ReplyDelete
  3. வணக்கம்
    குறைந்த கட்டணத்தில்
    E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

    1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
    2.IT RETURN - Rs 200/Person
    3. Form 10E
    4.Income Tax Notice - Ratification

    **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

    தொடர்புக்கு
    9677103843
    6383466805

    ReplyDelete
  4. ஐயா அதில் சிறப்பாசிரியர்கள் நியமணமும் உண்டா என்று தகவல் ஏதேனும் கிடைக்குமா?

    ReplyDelete
  5. இந்தா ஆரம்பிச்சிட்டாருல.... டேய் அந்த மாத்திரையை எடு....

    ReplyDelete
  6. 2023 aatchi mudindhu posting poduvaaaaaaar

    ReplyDelete
  7. Ippdi oru amaichar thantha makkal valga.thinam oru thagaval matturam ulagam viyakum tittam kalagunga sir

    ReplyDelete
  8. Please give me transfer or deputation order then you can take new teachers let me go to school(govt) don't make me go to private school if I go to private school I will fight for govt salary

    ReplyDelete
  9. Pgs or bt or Sg or special teachers... .. .what

    ReplyDelete
  10. amaichar yadhaium theliva solvadhillai ithu bt or sgt or pg /????????

    ReplyDelete
  11. Government aided ஸ்கூலுக்கும் கவர்மெண்டே Teacherயை போடுங்க சார் 10 லட்சம் 20 லட்சம் வாங்கிட்டு அவங்களே டீச்சர் போட்டுக்கிறாங்க சார் .கவர்மெண்ட்டுக்கு இது தெரியுமா தெரியாதா சார் .....!?

    ReplyDelete
    Replies
    1. Theriyum.... Aana theriyathu...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி