ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவது ஏன் என்பது குறித்து பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசியது:ஆசிரியர்களை ஓராண்டில் பணியிட மாறுதல் மேற்கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில் இருந்தது. இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகே பணியிட மாறுதல் என மாற்றப்பட்டுள்ளது.

இது சரியான முறை அல்ல என்றார்.அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டுக் கூறியது: பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், 6 மாதங்களில் மீண்டும் பழைய இடத்துக்கே வர விரும்புகின்றனர்.அதன் காரணமாகவே, ஓராண்டுக்குள் இடமாறுதல் பெறலாம் என்பதை 3 ஆண்டு காலமாக மாற்றி வைத்துள்ளோம் என்றார்.

8 comments:

  1. மிக அருமை ஊழியர் உழைக்கனும் குடும்பம் எதற்கு

    ReplyDelete
  2. 1.6.2016 in norms but Govt conducting councelling sep'16 We should work 4 year what aGO tells!

    ReplyDelete
  3. இப்படி எல்லாம் வெத்து காரணங்கள் சொல்ல வெட்கப் படவேண்டும் மனசாட்சி எங்கே போனது என்று .....யோசிக்கிறேன்

    ReplyDelete
  4. நிர்வாக மாறுதல் காரணத்தையும் சொல்லிடுங்க சார்

    ReplyDelete
  5. மூன்று கல்வி ஆண்டு முடித்தவர்கள் கலந்து கொள்ளமா சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி