புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு!


🌹புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு: தமிழகத்தில் 8ம் தேதி முதல் இடமாறுதல்   

🌹👉ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இம்மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் இடமாறுதல் கோரும் விண்ணப்பம் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.

👉தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்படுகிறது.

👉அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் நீண்ட காலமாக பல வட மாவட்ட பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.  இவர்கள் சொந்த மாவட்டத்துக்கு வருவதற்காக ஆண்டுதோறும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

👉ஆனால் குறைந்தபட்ச நபர்களுக்கே மாறுதல் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் 15 ஆண்டுகள் வரை தென் மாவட்ட ஆசிரியைகள் பலர் வட மாவட்டங்களில் பணிபுரியும் நிலை தொடர்கிறது.

👉ஒரு பள்ளியில் குறைந்தது ஒரு ஆண்டு பணி செய்தவர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற நிலை, இந்த கல்வியாண்டு முதல் குறைந்தது 3 வருடம் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றப்பட்டது. இது மாறுதலை எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

👉மேலும் ஒவ்வொரு பணித்தொகுப்பிலும் 100 இடங்களுக்கு மேல் காலி ஏற்பட்டால் மட்டுமே பொது கலந்தாய்வு நடத்தப்படும், நிர்வாக காரணங்களுக்காக தகுதி வாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் உத்தரவு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்பது போன்ற புதிய நியதிகளும் வகுக்கப்பட்டன.

👉இது பல ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 21ம் தேதி முதல் 28ம் தேதிவரை கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ெபறுவது கடந்த 28ம் தேதியுடன் முடிந்தது.

👉பல மாவட்டங்களில் வழக்கமாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர்.

👉இதையடுத்து வருகிற 8ம் தேதி ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் வட்டார கல்வி அலுவலர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் நடக்கிறது. 15ம் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

3 comments:

  1. Pg trb apply pandrappa arrear completion student lateral entry Ku epdi apply panananum solunga plz

    ReplyDelete
  2. பணம் இருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு கூட மாறுதல் வாங்கலாம்......


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி