எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு  அரசு கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின  3-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 1,982 பேருக்கு அழைப்பு  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு  அரசு கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின  3-ம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 1,982 பேருக்கு அழைப்பு 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு பொதுபிரிவினருக்கான 2-ம் நாள் கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில் அரசு மற்றும் தனி யார் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கு 3,968 எம்பிபிஎஸ் இடங் கள், 1,070 பிடிஎஸ் இடங்கள் உள் ளன. இதேபோல், தனியார் கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 690 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கு அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கான தரவரிசைப் பட்டியலில் 31,353 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 25,651 பேரும் இடம் பெற்றனர். இதில் அகில இந்திய கலந்தாய்வு, எய்ம்ஸ், ஜிப் மர் ஆகியவற்றில் படிக்க 100-க்கும் மேற்பட்டோர் சென்றுவிட்டனர். இந்நிலையில் அரசு ஒதுக் கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்னாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத் துவமனையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு பிரிவினர்களுக் கான கலந்தாய்வில் 48 பேருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனு மதிக் கடிதம் வழங்கப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு நேற்று முன்தினம் தொடங் கியது. முதல்நாள் கலந்தாய்வில் 977 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் பெற்றனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த மாணவ, மாணவியர் சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தனர். பொதுப் பிரிவினருக்கான இரண் டாம் நாள் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங் கேற்குமாறு 1,488 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட் டது. கலந்தாய்வில் பங்கேற்ற தகுதி யான மாணவ, மாணவியருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற கலந்தாய் வில் அரசு மருத்துவக் கல்லூரி களில் 70 சதவீதத்துக்கும் அதிக மான இடங்கள் நிரம்பின. இன்று நடைபெறும் மூன்றாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,982 பேருக்கு (நீட் மதிப்பெண் 463 முதல் 422 வரை) அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி