மருத்துவ படிப்பு கலந்தாய்வு: அரசு பள்ளி மாணவி ஜீவிதா, சென்னை கல்லூரியை தேர்வு செய்தார் ‘எளிய மக்களுக்காக சேவை செய்வேன்’ என பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2019

மருத்துவ படிப்பு கலந்தாய்வு: அரசு பள்ளி மாணவி ஜீவிதா, சென்னை கல்லூரியை தேர்வு செய்தார் ‘எளிய மக்களுக்காக சேவை செய்வேன்’ என பேட்டிமருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவி ஜீவிதாவுக்கு சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. எளிய மக்களுக்கு சேவை செய்வேன் என அவர் தெரிவித்தார்.

சென்னை அனகாபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2017-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்தவர் ஜீவிதா. இவர் 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் 361 மதிப்பெண் பெற்றும், இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் விடாமுயற்சியை நிறுத்தவில்லை. மீண்டும் தனியார் நீட் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்றார்.நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜீவிதாவின் மருத்துவ படிப்புக்கு உதவுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கடன் உதவி பெற்று நீட் பயிற்சி மையத்தில் படித்து வெற்றி அடைந்த மாணவி ஜீவிதா, சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றே அதிகம் விரும்பினார். அவர் நினைத்தது போலவே, சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் ஜீவிதா கலந்து கொண்டு, மருத்துவ படிப்புக்கான ஆணையை பெற்றார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-என்னுடைய விருப்பப்படி எனக்கு சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்னுடைய மருத்துவ படிப்புக்கு உதவுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.அதேபோல், ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் என்னுடைய கல்விக்காக பணம் கொடுத்தார். அந்த பணத்தை வைத்து கடன்கள் அடைத்தது போக, மீதி பணத்தை கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை கட்டி இருக்கிறேன். நான் டாக்டராகி என்னை போன்ற எளிய மக்களுக்கு சேவை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜீவிதாவின் தந்தை டெய்லராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய தாயார் பெயர் பவானி. ஏழ்மையில் வாழ்ந்தாலும் மகளின் கல்வி கனவை பூர்த்தி செய்ததில் அவர்களுக்கு பேரானந்தம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

8 comments:

 1. ஒரு அரசு பள்ளி மாணவி விடாமுயற்சியால் வெற்றி பெற்றிருப்பது மகிழ்சி அளிக்கிறது

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Congratulations. Sister.all the bestm

  ReplyDelete
 4. thank you mrs thamizhsai mam and DGP sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி