ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Jul 12, 2019

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை, ஜூன், 20ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தாக்கல் செய்த மனு:ஒரே பள்ளியில், மூன்று ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசின் நிபந்தனையால், எங்களால் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிபந்தனை, சட்டவிரோதமானது; ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலையில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பட்டதாரி ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளி கல்வித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இவற்றை விசாரித்த, நீதிபதி, வி.பார்த்திபன், ௨௦௧௯ ஜூனில் பிறப்பித்த, பள்ளி கல்வித்துறை உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்தார். கவுன்சிலிங்கை தள்ளி வைக்கும்படி, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கை நிறுத்தம் செய்து, தொடக்ககல்வி இயக்குநர், கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி