ராட்சசி திரைப்படம் - இவ்வளவுத்தானா உங்கள் புரிதல் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

ராட்சசி திரைப்படம் - இவ்வளவுத்தானா உங்கள் புரிதல் ?


பொதுபுத்தியை"ரொமாண்டிசைஸ்" செய்யும் ராட்சசிக்கு கண்டனங்கள்,,,,

ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி திரைப்படம் பார்த்தேன்.அரசுப்பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்  காரணம் என்று வியாக்கியானம் செய்யும் போலி முற்போக்கு வியாபாரமே ராட்சசி

ஒரு தனியார் பள்ளியின் முதலாளியை விட ,ஒரு காவல்துறை அதிகாரியை விட அரசுப் பள்ளி ஆசிரியர் இரக்கமற்ற இழி பிறவி என்கிறார்(கவிதாபாரதி, பள்ளிக்கு  குண்டு வைக்கப் போறீகளா என தனியார் பள்ளி முதலாளியிடம் கேட்கிறார் அவர் கோபமடைந்து பிள்ளைகளின் உயிர் முக்கியமில்லையா என்கிறார்)அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போவதற்கு ஜோதிகா வருத்தமடைகிறார் அரசுபள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார் மறந்தும் கூட ஏன் தனியார் கல்வியை ஒழிக்க கூடாது என புனைவில் கூட கேட்க வலிமையற்று இருக்கிறது இந்த முற்போக்குத்தனம்ஒரு தமிழாசிரியர் மாணவர்களை இலக்கிய போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு ஆர்வம் காட்டகாரணம் ஒருநாள் on dutyயும்,பெற்றோர் ஆசிரியர்கழக நிதியும்தான் காரணமாம் இதைவிட ஆசிரியர்களைகேவலப்படுத்த என்ன இருக்கிறது.கொஞ்சமாவது பள்ளிக்குள் வந்து கள ஆய்வு செய்து படம் எடுங்கள்.ஆசிரியர் போராட்டங்களை அரசு ஒடுக்கிய போது போராட்டத்தை என்ன சொல்லி ஒடுக்கியதோ அதையே வசனமாக வைத்திருக்கிறார் இதழாளர் பாரதி தம்பி. கல்வியின் தரம் குறித்து அரசுக்கு ஒவ்வொரு முறையும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன இவை எதுவுமே தெரியாமல் உங்கள் முற்போக்கு வேடத்திற்கு ஏன் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள்?

வழக்கம்போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறீர்கள் பலமுறை பேசியாகிவிட்டது இதைப்பற்றி இந்திய அரசியலமைப்பின் தனிமனித சுதந்திரம் குறித்து உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது ?ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்வீர்களா? சரி உங்கள் வாதத்திற்காக நீங்கள் சொல்வது போல அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்க்க வேண்டுமெனில்  அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய உபகரணங்கள் இல்லாமல் போனால்  ,அதனால் அவர் மகன் உயிர் போனால், அந்த உபகரணங்கள் இல்லாமையால் உ யிர் போன அரசைக் கேள்வி கேட்க வேண்டுமா?அல்லது அரசு மருத்துவர் என்பதால் உயிர் போனதற்கு நாம் தான் காரணம் என சுயவதையில்புழுங்க வேண்டுமா?

கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்கி வரும் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப உங்களுக்கு தைரியம் இருக்கிறதா எந்த அடிப்படையும் இல்லாமல் போகிற போக்கில் ஏன் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.நேற்று வெளியான தமிழக மருத்துவ மாணவர் பட்டியலில் பத்தில் ஒன்பது பேர் cbse யில் படித்தவர்கள் ஒரு மாணவர் மட்டும் தான் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் நீட் தேர்வின் இந்த வஞ்சகம் பற்றி அரசின் இந்த செயல்பாடு பற்றி கேள்வி கேட்டு உங்களால் ஒரு வசனம் வைக்க முடியுமா?

எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள்சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையைசரிவர செய்யாமல் இருக்கலாம் அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது எந்த வகையில் நியாயம்?எல்லாவற்றையும் விட கொடுமையானது ஒன்பதாம் வகுப்பில் சமீப காலங்களில் எந்த மாணவனையும் அரசு பள்ளிகளில் பெயில் ஆக்குவதில்லை மாறாக நீங்கள் ஒரே பள்ளியில் அதுவும் ஒரு கிராமப்புற பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் 82 பேரை பெயிலாக்குவதாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் .

deo , ceo கையொப்பமிட்டு தயாரிக்கும் தேர்ச்சிசான்றிதழை தலைமையாசிரியர் மாற்றி அத்துணை மாணவர்களையும் பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற வைக்கிறார் என்கிறீர்கள் சரி. அதனை தவறு என்று சொல்லி நீதித்துறை அவரை கைது செய்கிறது. அந்த மாணவர்களில் 79 பேர்  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைக் காரணம் காட்டி நீதிபதியே சொந்த ஜாமீனில் தலைமையாசிரியரை விடுதலை செய்கிறார் என்று படத்தை முடிக்கிறீர்கள்.ஒருவேளை நான்கு பேர்தான் தேர்ச்சி  பெற்றுஇருந்து 79 பேர் தோல்வியடைந்திருந்தால்தலைமையாசிரியரை சிறையில் அடைத்திருப்பீர்களா?இதுதான் உங்களின் ஒரு முற்போக்கா?இந்த அமைப்புகுறித்த புரிதல் இவ்வளவுதானா?

நன்றி...
கிருஷ்ணமூர்த்தி...

23 comments:

  1. எந்த சமுதாயம் ஆசிரியர்கள் மீது சேற்றைவாரி வீசுகிறதோ அச்சமுதாயம் பாழாய் கெட்டொழிந்து போகும்.....

    ReplyDelete
  2. Panathirkaga p.... Thin..ulagam. Ethil nalla kathaigalil mattume nadakkirathu. Teacher kevalama pesina kudumbam munneruma?

    ReplyDelete
    Replies
    1. Poda porukki tea nalada yaru sonnalum ketkanum athukooda theriyala

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Ungal karuthu miga arumai aiya. Mumbai la poranthu pozapukaga chennai ku vantha jothikaukum, intha padatha eadutha eyakunarukum saatai adi sir..

    ReplyDelete
  5. எப்படியோ ஒரு வழியாக சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் நடக்கட்டும் ஒரு நாள் இந்த நிலமைக்கெல்லாம் மாறுதல் உண்டு அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு

    ReplyDelete
  6. இது போல் வசனம் பேசுவதினால் உண்மையயை மறைக்கமுடியாது. தரமான படம்.

    ReplyDelete
  7. 12ஆம் வகுப்பு புதிய புத்தகத்திற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கும்போது ஆசிரியர்கள் அவரவர் இஷ்டத்திற்கு வெளியே செல்கின்றனர். மாணவனும்......

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உண்மைதான் என்று இந்த கட்டுரையை எழுதியவருக்கே தெரியும்

    ReplyDelete
  10. Onnu matum puriyala government teacher.apdina op adikariga private techer la hard work pandrigala keta private job vandhu paru kastam theriyum nu soilrigaley ipadi teacher's pathi pesarigala negalum government school ku teacher ah vandhu paruga kastam theriyum summa veliya irudhutu government teacher kindal pandradhuku ungaluku rights illa because yega mela yevlo velai sumai iruku nu yegaluku dha theriyum.

    Private school la oru ilavasamum illa panatha vagaraga unaku sambalatha tharaga ne Padam nadathara.ana government school la yelam free ipa Chappell padhila shoes tharaga anu Periya announcement kuduthagala kudutha govert ah students shoes size measure panuvaga naga dha pananum ipa di iruka neraya free announcement all school computer ulagama marum smart card adhu idhu nu adhala thana nadandhuruma teacher's illama indha velailam seivanam adhu illama Padam nadathanum.

    ReplyDelete
  11. கையில் காசு கொடுத்தால் போதும் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் வசனம் பேசுவார்கள் திரைபடத்தில்

    ReplyDelete
  12. அரை குறை ஆடையில் நடிக்கும் ஜோதிகாவுக்கு எங்கு தெரிய போகிறது a ஆசிரியர் மகத்துவம்?

    ReplyDelete
    Replies
    1. Poda porukki teachers nee unvimarsaname unmugathai kattukirathu

      Delete
  13. Oru gov school la hm bathroom clean pandraga na vekamey illama perumaya pesaromey oru hm level ku padicha oruthara toilet kaluvara level ku vita government ah yarum kevalama pesamatom ipo vara satasabaila anaithu school layum toilet vasadhi seiyapadum nu announcement varudhey apo toilets illama school run pandra government ah yarum onnu soilamatom.
    School la toilet idijirukey adhuku hm suspend ana adhu yena avar veeda illa avar adha katnara andha level la iruka building la toilet poraga adhuku yar permission kudutha adha yar build pana toilet mosama irukunu hm soiliyum yar action yedukala toilet illama open place la use pandradhuku indha condition la yachum toilet irukatum nu vitruparu ana adhala yosikama government pandradhelam romba good teacher's matum bad oru school la 200 students padikaraga ana toilet 2 romba naila infrastructure la.

    ReplyDelete
  14. Govt kittayae school iruku govt teacher irukanga apram yethuku private school la RTE la 25% idam othuki athuku govt selavu seiyanum?? Private school la yenna freeyava 25% seat tharanga athuku govt dhan fund othukuthu. govt maraimugama thaniyar palligalai valarthukondu arasu palligalai azhikirathu

    ReplyDelete
  15. Mothathila , tasmacla varumanam vandhal than ungaluku samballam ,idhu than indraya nilama

    ReplyDelete
  16. பேசுவோர்,பேசட்டும்...
    தூற்றுவோர், தூற்றற்றும்...

    இப்படி கீழாக பேசி,பேசியே
    கொஞ்சம் கொஞ்சமாக அரசு கல்வித்துறையை அழிவுக்கு கொண்டு சென்று,
    கார்பிரேட் முதலாளிகளிடம்
    உணவிற்காகவும்,தண்ணீருக்காகவும்,கல்விக்காகவும் கையேந்தும் நிலைக்கேத் தள்ளி
    கடைசியில் சமூகநீதியை வேர் அறுக்கும் நிலைக்குத் தள்ளி அடிமை நாடாக மாற்றினாலும்
    நம் மக்கள் விழித்துக்கொள்ள மாட்டார்கள்......

    அரசு ஊழியர்களின் சங்கம் தங்களது செயல்திறனின் மூலம்தான் அரசுத்துறையை மேம்படுத்த முடியும்...

    அரசை நம்பி நம்பி ஒன்றும் இல்லை ....

    அரசுத்துறையென்றால் ஏளனம்,இளக்காரம்,எளிதாக பழிசுமத்தும் இடம்
    என்ற நிலையிலிருந்து அதை மாற்ற,
    அண்ணாவின் வழி வந்தப் பிள்ளைகள்
    கடமை,கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்று ஆயுதங்களைக் கொண்டு,
    அரசுத்துறைகளில்
    வளர்ச்சி,லஞ்சமின்மை,மதிக்கத்தக்க இடமாக மாற்றும் வழிவகைகளை ஆராய்ந்து அதை செயலாக்கம் செய்ய வேண்டும்......

    ReplyDelete
  17. எங்கள் பள்ளியில் ஒரு ஜோதிகா இருக்கிறது.. ஒரு நிமிடத்தில் ஊர் கலவரத்தை உண்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவார்...

    ReplyDelete
  18. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். தனியார் மயத்தை ஊக்கப்படுத்தக் கூடாது.

    ReplyDelete
  19. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். தனியார் மயத்தை ஊக்கப்படுத்தக் கூடாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி