அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை குறைத்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை குறைத்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரியைப் போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக சமத்துவத்தற்கான மருத்துவ சங்கத் தலைவர் ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று கொண்டு விட்டது என்று அவர் சுட்டிக் காட்டி இருந்தார். ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஒரு தனியார் கல்லூரி  என அரசு குறிப்பேட்டீல் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.எனவே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுக் குறிப்பேட்டில் தனியார் என குறிப்பிட்டதை நீக்கவேண்டும் எனவும், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை
விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்ணாமலை பல்கலைக்கழகம் கட்டணத்தை நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். ரூ.5.50 லட்சத்தில் இருந்த கல்வி கட்டணத்தை ரூ.4 லட்சமாக குறைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்லூரி கட்டணத்தை நிர்ணயிப்பது தவறு என்றும் கட்டண குழு தான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி