சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2019

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உடற்கல்விக்கு முக்கியத்துவம்


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் உடற்கல்வி கட்டாய மாக்கப்பட உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவ , மாணவிகள் படித்துவருகின்றனர்.

இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பாடச்சுமை அதிகமாக இருப்பதாகவும், அவற்றை குறைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதுதவிர விளை யாட்டு மற்றும் உடற்கல்விக்கு சிபிஎஸ்இ பள்ளிகள் முக்கியத் துவம் தருவதில்லை எனவும் கல்வியாளர்கள் குற்றச்சாட்டு வைக் கின்றனர். இந்நிலையில் பாடத்திட் டத்தை மாற்றியமைக்கும் பணி களில் சிபிஎஸ்இ இப்போது முனைப்பு காட்டி வருகிறது. அதில் விளையாட்டுக் கல்வியை கட்டாய மாக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாழ்வியல் திறன்களுடன்... இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் கூறும்போது ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில் வாழ்வியல் திறன்களுடன் உடற்கல்வியையும் சேர்த்து பாடமாக வைக்க முடிவாகியுள்ளது.

அதன்படி பள்ளி வேலை நாட்களில் தினமும் அனைத்து வகுப்புகளுக்கும் உடற் கல்விக்கு ஒரு பாடவேளை கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். அதேநேரம் இதற்கு எழுத்து தேர்வு ஏதும் கிடையாது. மாண வர்கள் விளையாட்டு திறன்களை பொறுத்து மதிப்பெண்கள் வழங் கப்படும். விருப்பமுள்ள ஏதாவது ஒரு விளையாட்டை மாணவர்கள் கட்டாயம் விளையாட வேண்டும். கல்வி ஆண்டின் இடையில் வேறு ஒரு விளையாட்டுக்கு மாறிக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும்’’என்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி