பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - kalviseithi

Jul 19, 2019

பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை


இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் பேர் வரை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் விவரங்களை கல்வியியல் மேலான்மை தகவல் மையம்(எஜூகேசன் மேனேஜ்மன்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்-இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சில பள்ளிகளில் ஆய்வு செய்தபோது, இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்யாதது தெரியவந்துள்ளது.

அதனால் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஜூலை 24ம் தேதிக்குள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்ஸில் குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது. இஎம்ஐஎசில் உள்ள மாணவர் சேர்க்கை விவரத்தை வகுப்பு வாரியாக விவரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இ-மெயில் முகவரிக்கு ஜூலை 24ம் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 25ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இணை இயக்குனர்கள் வர உள்ளனர். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆதரவாக, சில அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மே மாதத்தில் மாணவர் சேர்க்கையே நடத்தவில்லையோ?? மேமாதத்தில் மாணவர் சேர்க்கையே நடத்தாத அரசுப் பள்ளிகள் குறித்து அரசு தீர ஆராய வேண்டும்.. மேலும் பல பள்ளிகளுக்கு தேவையான நிதியை அரசு கொடுத்தும் போலி ரசீதுகளை வைத்து நிதியை சுருட்டிய தலைமை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து 100 மடங்கு அபராத தொகையை வசூலிக்க வேண்டும்..

    ReplyDelete
  2. தனியார்பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் தான் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்கு அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது.. அப்படி இருந்தும் அடிப்படை வசதிகளில் குறைபாடு ஏற்பட காரணம் அரசு ஒதுக்கிய நிதியை திருடி தின்று போலி ரசீதுகளை வைத்து அரசை ஏமாற்றும் சில திருடர்கள் தான் காரணம்... ஆனால் பழியை அரசின் மீது போட்டு இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்... தமிழக அரசு இதுகுறித்து தீர ஆராய்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கான பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் இதர வரவுகள் செலவழிக்கப்பட்ட விதம் குறித்து மறு தணிக்கை செய்ய வேண்டும்..

    ReplyDelete
  3. இந்திரலோகத்தில் நீ.அழகப்பன்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி