பள்ளிகள் கட்டமைப்புகளை மேம்படுத்த கல்வித் துறை முடிவு! - kalviseithi

Jul 29, 2019

பள்ளிகள் கட்டமைப்புகளை மேம்படுத்த கல்வித் துறை முடிவு!


அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட் டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம் உட்பட பல் வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. எனினும், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை, கட்டிடம் உட்பட முறை யான உட்கட்டமைப்புகள் இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துதல்அவசியம் என தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர் கள் உதவியுடன் கணிசமான அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உட்பட தேவையான உட்கட்டமைப்பு களை ஏற்படுத்தித்தர கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது. இதற்கான பள்ளி கள் வகைப்பாடு பட்டியல் தயாரிக் கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி களின் உட்கட்டமைப்பு சார்ந்த முழு விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இயக்குநரகத் துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

2 comments:

 1. வணக்கம்
  குறைந்த கட்டணத்தில்
  E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

  1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
  2.IT RETURN - Rs 200/Person
  3. Form 10E
  4.Income Tax Notice - Ratification

  **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

  தொடர்புக்கு
  9677103843
  6383466805

  ReplyDelete
 2. Pg Trb economics WHATSAPP group 9600640918

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி