சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம்

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை உயர்வு : பள்ளிக்கல்வித்துறை

 8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது:சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கோரிக்கை வைத்திருந்தார். புதிய கல்வி கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்படும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் கூறினார். மும்மொழிக் கொள்கை குறித்து சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். தமிழ், ஆங்கில மொழிகள் தான் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படும். இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை  அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்

2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்

3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.

4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.

5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.

6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.

ஆசிரியர் நலன்

7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.

9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.

10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி

மாணவர் நலன்

11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.

12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்

13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்

14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.

15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்

16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்

17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்

 மின் ஆளுமை

18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்

20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நூலகம்

21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்

22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்

23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்

24) தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்

• சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் – கீழடி, சிவகங்கை மாவட்டம்

• தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் – தஞ்சாவூர்

• நாட்டுப்புறக் கலைகள் - மதுரை

• தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி

• பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி

• கணிதம், அறிவியல் - திருச்சி

• வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்

• அச்சுக்கலை – சென்னை

25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்

26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்

27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்

28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் தொடங்கப்படும்

29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்

30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.

31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்


நிர்வாகம்

32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்

33) கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்

34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி

35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

உலகத் தமிழர் நலன்

36) உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவை அறிமுகம்.

37) உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல். முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடையாக வழங்கப்படும்

*இன்றைய சட்ட பேரவை கூட்டத்தொடரில் கல்வி மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.*

*அதன் படி, பள்ளிக் கல்வித்துறையில் 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.*

*1⃣அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும்.*

*2⃣ 88 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் விரைவில் திறக்க திட்டம் விரிவுபடுத்தப்படும்*

*3⃣எழுத படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வியை பயிற்றுவிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.*

*4⃣அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12.39 கோடியில் ஒருங்கிணைந்த நலவாழ்வு திட்டம் கொண்டுவரவும், 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை 6 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.*

*5⃣மேலும், எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களின் வருகையை தெரிவிக்க ரூ.1 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.*

*6⃣ 2019 - 2021 இல் சிறப்பு பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வித்திட்டம் 6.23 கோடியில் செயல்படுத்தப்படும்*

 *7⃣ கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் ஒரு கோடியில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும்*

*8⃣ அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2.34 கோடி செலவில் அடைகாப்பு மையம் உருவாக்கப்படும்.*

*9⃣ 50 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி மூலம் பாடம் நடத்த திட்டம்*

 *1⃣0⃣ 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி மற்றும் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும்*

*1⃣1⃣ வெளிநாட்டு பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு 100 மாணவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு*

*1⃣2⃣ பட்டதாரி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள், கோவை சேலம் திருச்சி மதுரை நெல்லை -தலா ரூபாய் 20 லட்சம் செலவில் கலந்தாய்வு கூடம் உருவாக்க திட்டம் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.*

28 comments:

  1. Pona time idhey dhana soinaru idhuku ye budget

    ReplyDelete
  2. Scl upgrade patri ethuvumaeeee solllaalaaa..????

    ReplyDelete
  3. PART TIME TEACHER ELLAARUKKUM IVINGALE VISAM VAANGI KODUTHAAL NANDRAAGA IRUKKUM.

    ReplyDelete
  4. நீ இப்படி அறிக்கையா விட்டுட்டு போக வேண்டியதான்...

    மங்குனி அமைச்சரே...

    ReplyDelete
  5. 2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை

    தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
    மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல்.

    தொடக்கக்
    கல்வித்துறையில் SSA மூலம் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் 2004 முதல் 2012 வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.

    ஒரு ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படும்போது, கலந்தாய்வில் முதலில் இடைநிலை ஆசிரியருக்கு(JUL11) பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிய பின்னர் தான்

    பட்டதாரிகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்(JUL15) மாவட்டம் விட்டு மாவட்டம்(JUL15)
    மாறுதல் நடத்தப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கோ, சொந்த ஒன்றியத்திற்கோ, வருவதற்கான வாய்ப்புகள் இதுநாள்வரை ஏற்படவே இல்லை.

    இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.

    அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தது போல் ஒரே பள்ளியில்,ஒரே ஒன்றியத்தில் பணியாற்றுகிறோம்.

    ஆகவே ஐயா அவர்கள் பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குமாறு இயக்குனர் அவர்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

    தொடர்புக்கு
    தியாகராஜன்
    9884153429
    மாநில தலைவர்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

    ஜாக்டோ ஜியோ தகவல் தொடர்பு செய்தியாளர்

    ReplyDelete
  6. உலகமே வியக்கிறது.... அப்பப்பா....

    ReplyDelete
  7. நூலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு
    அறிவிப்பில் கூறியபடியே நிறைவேற்றப்பட்டால் ஒரளவிற்கு படிக்கும் சமூகத்தை முன்னேற உதவியதாக இருக்கும்..

    ReplyDelete
  8. 10 லட்சம் பி.எட்., பட்டதாாிகளில்
    ஒத்த லட்சம் பேருக்கு கூட தம் ஆயுட் காலத்தில் ஆசிாியப்பணி கிடைக்குமா என்பது சந்தேகமே,
    அவா்களுக்காக இதுவரை யாரும் குரல் கொடுக்கவே இல்லை,
    சாமானிய மக்கள்
    அரசுப்பள்ளி ஆசிாியா்களை
    பின்பற்றியே தனியாா் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவதாக கூறுகிறாா்கள், ஆசிாியா்களோ
    அரசாங்கம்தான்
    தனியாா் பள்ளிகளை ஊக்கபடுத்துவதாக கூறி
    பிதற்றுகிறாா்கள்
    ஆனால் அதை எதிா்த்து ஆசிாியா்கள்
    இதுவரை போராடியதாக தொியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. இதற்கு போராட்டம் பண்ண வேண்டியவர்கள் பெற்றோரும் B.ed முடித்தவர்களும்தான்.ஏன் என்றால் அரசு ஆசிரியர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை

      Delete
  9. இப்படி ஒரு திட்டம் கொண்டுவந்து நம் வாழ்வை வளமாக்கிய அம்மா வாழ்க. Part time teacher

    ReplyDelete
  10. இந்தியாவே திரும்பி பாா்க்கிறது,
    அட
    ஆசியாவும் திரும்பி பாா்க்கிறதே!

    ReplyDelete
  11. Tet pass panuna engaloda valkai
    2013,2017 pass pannunathu waste thana nanga rempa kasta pattu paduchathu ellam waste aa.adipadai vasathi kuda illama kasta patu padithom engaluku edhavadhu pannunga please sir.. ... ..... .

    ReplyDelete
    Replies
    1. Sir, no chance. Already this govt told 13k bt asst surplus. So, innum 5 years ku posting illa.

      Delete
  12. Part time teacher yelarayum savadichiru

    ReplyDelete
  13. Unmaya amma irudha ivlo naal namba kastapaduradha parthu sandhosa patruka mataga konjam konjama sagadikama orediya velaya vitu anupi oru Poisson bottle kuduga kudichitu kudupathoda setharom

    ReplyDelete
  14. ஒரு மைரு அறிவிப்பும் இல்ல.

    ReplyDelete
  15. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!காய்ந்த வயிற்றிலிருந்து மூட்டிய தீயில் உணவு..... மனம் உடைந்த பெயரளவில் சிறப்பு....... தான்...

    ReplyDelete
  16. Ulagam illai ullurr patti kuda intha arivippai thirumbi also thiruppi kuda pakkathu🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏼‍♀️🤦🏼‍♀️

    ReplyDelete
  17. ஆசிரியர்கள் வாழ்க்கையில் விளையாடும் இவர்கள் மல சிக்கல் வந்து நொந்து போவார்கள் ....ஒரு பிட்டு கூட வெளிய வராது.....வர கூடாது......

    இவங்க மொத்த குடும்பத்துக்கும் ..

    ReplyDelete
  18. பணி நியமனத்திற்கு காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் பற்றி ஒரு அறிவிப்பும் இல்லையா?

    ReplyDelete
  19. வழக்கு உள்ளது

    ReplyDelete
  20. வேலைக்கு போகணும்னா தேர்வு வைத்து தானே செலக்ட் பண்ணனும். அப்புறம் எதுக்கு இப்படி பகுதி நேர ஆசிரியர்கள் என்று கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாத ஒரு சம்பளத்தில் இந்த அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால் அடைக்கலராஜ் போன்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. கணிப்பொறி வேலையில் எத்தனை பேர் திறம்பட பள்ளிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியுமா? இப்பொழுது அனைத்தும் கணிப்பொறி மூலமாக செயல்படுத்தப்படும் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமாக செய்து நொந்து கிடக்கிறார்கள் என்று? இதில் எத்தனை பேர் இவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்கும் தெரியுமா? அனைவரும் கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்தவர்கள். குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 7700 வைத்து என்ன பண்ணமுடியும் என்று ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எங்கு செல்வது? இவர்களுடைய திட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்கள் தான் கிடைத்தார்களா? தேர்ச்சி பெற்றவர்களையெல்லாம் வேலைக்கு எடுத்து விட்டார்களா? எவ்வளவு தூரம் இவர்கள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று படித்து தேர்ச்சி பெற்று இவர்களையெல்லாம் வேலையில் அமரவைத்து விட்டார்களா? இனி 9 ஆம் வகுப்பு முதல் மடிக்கணிணி கொடுப்பார்கள். ஆனால் அதை சொல்லித்தர ஆட்களை நியமிக்க மாட்டார்கள். எல்லா வேலைகளும் இனி டிஜிட்டல் முறையில் என்பார்கள் ஆனால் அதற்கு ஆட்களை நியமிக்க மாட்டார்கள். வாழ்க தமிழ்நாடு?

    ReplyDelete
  21. I have completed in same school but my transfer application has not entered to on line pls help me what to do

    ReplyDelete
  22. I have completed five years service in same school but my application has not accepted pls help me what to do

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி