அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ - அமைச்சர் செங்கோட்டையன்


6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவு!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவிபெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து, கோபிச்செட்டிபாளையத்தில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நடப்பாண்டில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவிட்டுளார்.எனவே மாணவர்களுக்கு இலவச வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அத்துடன், மாணவர்களுக்கு யூ-டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதத்திற்குள் உருவாக்கப்படும். வகுப்பறையில் நடத்தும் பாடங்களும் யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் இறுதிக்குள் ஏழாயிரத்து 800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படஉள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி