"முதல்வர் எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?" - ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2019

"முதல்வர் எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?" - ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்டம்


பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

அந்தப் போராட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று வாபஸ்பெறப்பட்டது.ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். சாலைமறியல் உட்பட பல்வேறுகட்டப் போராட்டங்களை அவர்கள் நடத்தினர். ஆனால், அவர்களை அழைத்துப் பேச தமிழக அரசு தயாராக இல்லை. சில நாள்களுக்குப் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ வாபஸ்பெற்றதுஅந்தப் போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் மீது வழக்குகள் போடப்பட்டன.அதனால், பதவி உயர்வு கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணி, கடந்த மே 31-ம்தேதி பணி ஓய்வுபெற்ற நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் மூன்று நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.இது குறித்து நம்மிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சிலர், "அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனாலும், சுப்பிரமணி மீதான பணி இடைநீக்கம் உத்தரவு வாபஸ் உட்பட எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

முதல்வரைச் சந்திப்பதற்குத் தொடர்ச்சியாக முயற்சிசெய்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு அவர் நேரம் கொடுக்கவில்லை. எங்களைச் சந்திக்க ஏன் அவர் மறுக்கிறார் என்று தெரியவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி