அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி:பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு


பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம்  கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்‌ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.

இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  ஓராண்டு புனேவில் உள்ள தக்‌ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் அனைத்தும் இலவசம்.மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விருப்ப கடிதத்தை அப்பள்ளி தலைைமையாசிரியர் பெறவேண்டும்.

ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என தேர்வு செய்து இம்மாதம் 22ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். டிசம்பர்8ம் தேதி  தக்‌ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த சுவரொட்டியை பள்ளி தகவல் பலகையில் வைக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.

3 comments:

  1. அடித்தளத்தை கட்டாமல்.....பதினெட்டாவது மாடி கட்டுவது போல உள்ளது......


    ஒன்றாம் வகுப்பில் இருந்து நல்ல கல்வியை அளிக்க வேண்டும்.....

    ReplyDelete
  2. Neeta coachinga?, neegalada ,? Engala innumada vaichu seiya poringa

    ReplyDelete
  3. Adei tamil nattula english medium state board aparam cbse la padikira pasanga kooda neet jee pass panna mudiyama mukkittu irukanga...
    Mothalla methodology ah change pannunga, mbbs mela irukura oru grace ah stop pannunga, hospitals elam govt control kondu vanga, no private hospital nu pottaa namaku en indha neet prachanai,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி