கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி நியமனம்


பள்ளி கல்வி துறையின் தொலைக்காட்சிக்கு, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகபள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள்செய்யப்படுகின்றன.

அவற்றில் ஒரு திட்டமாக,கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை, மாணவர்களுக்கு காட்டும் விதமாக, கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு, விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி துறை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், துார்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி, ஜெயலட்சுமி, கல்வி தொலைக்காட்சியின் நிர்வாக பொறுப்பில், சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக உள்ள, பொன்.குமார், கல்வி தொலைக்காட்சியின், தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி