ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் - சூர்யா - kalviseithi

Jul 20, 2019

ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் - சூர்யா


ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன் என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று விமர்சனம் எழுந்த நிலையில் இவ்வாறு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தவன் நான் என்று சூர்யா தெரிவித்துள்ளார். தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://innovate/my/gov/in/new-education-policy-2019/ என்ற இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்று சூர்யா தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில், எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை பரிந்துரை செய்திருப்பது அச்சமூட்டுவதாகவும், இந்த நுழைவுத் தேர்வுகள், உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்துவிடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என கூறியுள்ளார்.

8 comments:

 1. ST.XAVIER’S ACADEMY:
  NEAR HOLY CROSS COLLEGE, NAGERCOIL. &
  NEAR ANNAI HOSPITAL, KARUNGAL,
  CELL: 8012381919
  TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
  தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
  TRB தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடை பெற்று வருகிறது.
  கடந்த TRB 2017 தேர்வில் TAMIL பாடத்தில் தமிழகத்திலேயே BC-ல் முதுகலை ஆசிரியர் வேலை பெற்ற முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.
  STUDY MATERIALS கிடைக்கும்
  * PG TRB :ENGLISH
  * PG TRB :MATHEMATICS
  * PG TRB :BOTANY
  * PG TRB :COMMERCE

  ReplyDelete
 2. Correct ah than kekuringa... Village students romba kasta paduvanga....

  ReplyDelete
 3. arasiyal Ku Vara exam vekka sollunga...athu mattum seiya Mattaga...

  ReplyDelete
 4. நேர்மையாக பணி செய்பவர்கள் இவ்வுலகில் வாழவேண்டும்.உங்கள் துணிச்சல் எல்லோருக்கும் வரவேண்டும்.நன்றி.

  ReplyDelete
 5. Emathi pizhaikkathavarkal village manithargal( naam)....but avarkalai ematri pizhaippavarkal panakkararkal .....intha ematrathavarkalin urimaiyaeee elavasa kalvi....athai parikka vendam..ithaivathu periya panakkararkal( pirabalangal...) parppavarkalidamirunthu thatti kekkalamaeeeeee...???

  ReplyDelete
 6. தற்போதை கல்வி கொள்கையே மிக கேவலமாக இருக்கிறதென்றால். புதிய கல்விகொள்கை இதைவிட படுகேவலமாக இருக்கிறது.இனிவரும் காலங்களில் ஒருசாரர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படும்.

  ReplyDelete
 7. அரசியல் வாதி தம்மைபுதுப்பித்துகொள்ளாமல் புதிய கல்வி கொள்கைபற்றிபிதற்றுவதுமடைமை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி