கல்லூரி ஆசிரியர்கள் இடஒதுக்கீடு சட்டமசோதா மக்களவையில் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது - kalviseithi

Jul 2, 2019

கல்லூரி ஆசிரியர்கள் இடஒதுக்கீடு சட்டமசோதா மக்களவையில் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது


மக்களவையில் நேற்று மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால், ‘மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு) சட்டம்-2019’ என்ற சட்டமசோதாவை தாக்கல் செய்தார்.

இதன்மூலம் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் வழிவகுக்கப்படுகிறது.

அவசர சட்டத்துக்கு பதிலாக இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். இது ஏற்கப்படாமல், சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2 comments:

  1. திறமையானவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி வழங்க வேண்டும்.
    பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கு 30%கூட இட ஒதுக்கீடு வழங்கலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி