புதிய கல்வி கொள்கை இன்று கருத்து கேட்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2019

புதிய கல்வி கொள்கை இன்று கருத்து கேட்பு


புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தறியும் கூட்டம், சென்னை பள்ளி கல்வி துறை வளாகத்தில், இன்று நடக்கிறது.மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி கொள்கையின் அம்சங்களுக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வி கொள்கை குறித்து, கருத்துகளை தெரிவிக்க, வரும், 31ம் தேதி வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, மத்திய அரசின் கல்வி கொள்கை குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், நேற்று முன்தினம் கருத்தறியும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தைநடத்த, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், கல்வி கொள்கை குறித்து, தமிழக பள்ளி கல்வி துறையினரின் கருத்தறியும் கூட்டம், சென்னையில், பள்ளி கல்வி தலைமையகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், இன்று நடக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அரங்கில் கூட்டம் நடக்கிறது. இதில், கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி