ஆசிரியர்களுக்கு சிஏ பயிற்சி அரசு ஏற்பாடு - kalviseithi

Jul 9, 2019

ஆசிரியர்களுக்கு சிஏ பயிற்சி அரசு ஏற்பாடு


பள்ளி கல்வித்துறை இயக்குநர கம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட் டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதவிர முதுநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்துக்கான புத்தாக்க பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது வணிகவியல், கணக்குப்பதிவி யல், பொருளியியல் பாடங்களின் ஆசிரியர்களுக்கு பட்டயக் கணக் காளர் படிப்பு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

 இதற்காக இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து வல்லுநர் கள் வரவழைக்கப்பட்டு ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்குஏது வாக இப்போதைய புத்தாக்க பயிற்சியின் இடையே சிஏ பயிற் சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்துதர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி