முதல்வரின் அறிவிப்பை எதிர்நோக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2019

முதல்வரின் அறிவிப்பை எதிர்நோக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

பணிநிரந்தரம் செய்யவில்லை எனில்  சம்பளத்தையாவது உயர்த்துங்கபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் அழுத்தம்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியது:-
இந்த பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம்.எதையும் அறிவிக்கவில்லைகல்வி மானியக் கோரிக்கையிலாவது அறிவிப்பார்களா என எதிர்பார்த்தோம்இப்போதும் எதையும் அறிவிக்கவில்லை.இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளதுடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2ஆயிரம் ஊதிய உயர்வை அறிவித்துள்ள நிலையில் பள்ளிகளில் கல்வியை போதிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு  இதே கூட்டத்தொடரிலே முதல்வரின் 110விதி அறிவிப்பிலாவது மனிதநேயத்துடன் 12 ஆயிரம் பேர் குடும்பநலன் கருதி ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது.
கல்விஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்இவர்கள் 14வது சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் 26-8-2011ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்து அதன்படி 2011-12 கல்வி ஆண்டில் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்விஓவியம்கணினிஇசைதையல்தோட்டக்கலைகட்டிடக்கலைவாழ்வியல்திறன்கல்வி பாடங்களில் பயிற்சி அளிக்க 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக SSA திட்டத்தில் நியமிக்கப்பட்டார்கள்இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது.
ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள்.இந்திய கம்யூனிஸ்ட்காங்கிரஸ்பார்வார்டு பிளாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்இதை தொடர்ந்து கல்வி ஆண்டுகள் கடந்த நிலையில் 4வது கல்வி ஆண்டான 2014-15ல் முதல்வர் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் ஏப்ரல் முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது.
இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும்வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர்ஊதிய உயர்வு எதுவுமின்றி மூன்று கல்வி ஆண்டுகள் முடிந்துவிட்டதுஇதோடு 14வழ சட்டப்பேரவை முடிந்து 15வது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து மீண்டும் அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்ததுஆனால் துரதிஷ்டவசமாக உடல்நலகுறைவால் முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 2016ல்  மறைந்துவிட்டதால் 3வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகி பதவியேற்ற72 நாட்களில்  ராஜினாமா செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 2017ல் முதல்வரானார்.
இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22 ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர்.
தொடர்ந்து ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் கோரிவந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014-15ல் ஊதிய உயர்விற்கு பிறகு எதுவும் வழங்கப்படாமல் இருந்ததுஎனவே கவலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துவிடக்கூடாது என சிலநாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதியஉயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க SSA மாநில திட்ட இயக்குநர் குறிப்பாணை பிறப்பித்தார். 7 கல்வி ஆண்டுகளில் இது 2வது ஊதிய உயர்வுஇதனால் தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 700 ஆனது.
2014ல் முதல்முறை சம்பள உயர்வு ரூ.2ஆயிரம் அளித்தபோது SSAவின் மற்ற தொகுப்பூதிய பணியாளர்களைப்போலவே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் மாதம் முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகையுடன் வழங்கப்பட்டது.
ஆனால் இம்முறை 2017ல் 2வது முறையாக ஊதிய உயர்வு வெறும் 10 சதவீதமாக்கிதோடு ஏப்ரல் மாதம் முதல் ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்காமலும் ஆகஸ்டு 2017 முதல் வழங்கினர்அதே சமயம் வழக்கம்போல SSA மாநில மையமாவட்ட மையவட்டார வள மைய அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும்ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கிவிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு பாராபட்சம் செய்துவிட்டனர்இதனை துறை அதிகாரிகளும் அரசும் சரிசெய்யாமல் இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த ரூ.700 ஊதிய உயர்வுக்கு பின்னர் 8வது கல்வி ஆண்டு முடிந்து இப்போது 9வது கல்வி ஆண்டு  நடக்கும்வேளையில் புதிதாக எந்தவித ஊதிய உயர்வையும் அறிவிக்கவில்லை. 9 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 சம்பள உயர்வை வருடாந்திர 10சதவீத உயர்வுடன் ஒப்பிடும்போது என்பது மிகவும் குறைவானதாகும்ஆண்டு ஊதிய உயர்வை சரிவர வழங்கி இருந்தாலே இந்நேரம் சாதாரணமாக ரூ.10ஆயிரம் கிடைத்திருக்கும் விலைவாசியும் விஷம்போல் ஏறிவிட்டதுபள்ளிக்கூடம் சென்றுவர பேருந்து கட்டணம்பெட்ரோல் விலை உயர்வு சமாளிக்க முடியவில்லைரூ.7ஆயிரத்து 700 குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகைகுடும்ப செலவை ஈடுகொடுக்க முடியவில்லைஅதனால் ரூ.10ஆயிரம் சம்பளம் கொடுங்கள் என கேட்கிறோம்.
7வது ஊதியக்குழு அரசாணைப்படி தொகுப்பூதியதாரர்களுக்கு 30சதவீத ஊதிய உயர்வை அமுல்செய்திருக்கலாம்ஆண்டுஊதிய உயர்வான 10சதவீத ஊதிய உயர்வை வழங்கி இருக்கலாம்.ரூ.10ஆயிரம் சம்பளத்திற்குகூட வழிசெய்யாமல்  அரசு அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
முதலில் எங்களின் சம்பளத்தை பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலுடன் சேர்த்து கருவூலம் மூலமே ECS முறையில் வழங்குங்கள்.
 தற்செயல் விடுப்புமருத்துவ விடுப்புமகப்பேறு விடுப்பு வழங்கி  சம்பள பிடித்தம் செய்வதை தவிருங்கள்எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுங்கள்.
பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்கும் அறிவிப்பைகூட கல்வி மானியக் கோரிக்கையில் வெளியிடாதது பகுதிநேர ஆசிரியர்களை மத்தியில் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.
அரசியல் சாசனத்தின்படி சமவேலை சமஊதியம் கிடைக்க வழி செய்யுங்கள்.ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துங்கள்மத்திய அரசின் குறைந்தபட்ச சம்பளத்தை சம்பளத்தை அமுல்படுத்துங்கள்ஒப்பந்த வேலையில் உள்ளவர்களுக்கு சட்டபடி அமுல் செய்திருக்க வேண்டிய EPF. ESI. போனஸ் நடைமுறைப்படுத்துங்கள்ஆனால் இதெல்லாம் செய்யாமல் பள்ளிப் பணிகளுக்கு எல்லா வகையிலும் மறைமுகமாக பயன்படுத்தி வருவதால் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறிஞ்சப்படுகிறதுஇதனால் பல்வேறு தருணங்களில் இறந்தவர்கள்பணி ஓய்வு பெற்றவர்கள்வேறு பணி கிடைத்து பணியை ராஜிநாமா செய்தவர்கள் என 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் போக எஞ்சி இருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கி தள்ளாடி வாடிவருகிறதுஇந்த காலிப்பணியிடங்களில் எங்களுக்கே கூடுதல் பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்காமல் நிதியும் வீணாகிறதுஎனவே இந்த நிதியை எங்களுக்கே பகிர்ந்து சம்பள உயர்வை வழங்கினாலே தற்போதுள்ள எங்களின் வறுமைநிலை அகலும்.இதனை அரசு எப்போதே செய்திருக்கலாம்.

ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களே முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறதுஅரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே முழுநேரமும் பள்ளிகளை திறந்து நடத்திவருகின்றர்.இதற்கென தனியே ஊதியம் எதுவும் தரப்படுவதில்லைபகுதிநேர ஆசிரியர்களை தேவைக்கு பயன்படுத்தி வரும் அரசு இவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
எமிஸ்பவர் பைனான்ஸ்இமெயில், Computer Typing Work உள்ளிட்ட கணினி சம்மந்தபட்ட வேலை மட்டுமின்றிபள்ளி நேரங்களில் தரப்படும் எல்லா விதமான வேலைகளையும் இந்த தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் பலன் எதுவுமின்றி செவ்வனே செய்து வருகிறார்கள்.
பாட ஆசிரியர்கள் பள்ளி வராத நாட்களிலும்ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் இவர்கள் பயன்படுத்தப்படும் விதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இவர்களின் வாழ்க்கைத்தரம் ஏறிவிட்ட விலைவாசியால் சிக்கலில் தத்தளிக்கின்றது.
கோவா மாநிலத்தில் ரூ.15ஆயிரம்,ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரத்து 203என அதிகபட்ச சம்பளம் இதே SSA பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த மாநில அரசுகளைப்போல குறைந்தபட்சம் அதே தொகுப்பூதியத்தை தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில் கடந்தஆண்டுகளாக ஒவ்வோருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53ஆயிரத்து 400ஐ உடனடியாக வழங்க வேண்டும்.
 இது ஒருபுறமிருக்க ஆண்டுகளுக்கும் போனஸ்கூட தரப்படாமல் உள்ளதுவேறெந்த துறைகளிலும் இதுபோன்ற நடந்ததில்லைபகுதிநேர ஆசிரியர்களும் SSAவில் பணிபுரியும்போது,   SSAவின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் கொடுத்துவிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு  மட்டும் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம்எனவே வருஷ போனஸ் நிலுவைத் தொகையை கணக்கிட்டு உடனடியாக வழங்கவேண்டும்.
மேலும்இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து  குடும்ப நலநிதியாக ரூ.2 இலட்சம் உடனடியாக வழங்கவேண்டும்.
P.F, E.S.I உடனடியாக அமுல்படுத்த வேண்டும்மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
1325 உடற்கல்விஓவியம்இசைதையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வு நடத்தியபோதும்தற்போது நடந்த 814 கணினி ஆசிரியர்கள் தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்கள் முற்றிலும் முன்னுரிமைகூட தரமால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்கல்வித்துறையில் மட்டுமே இதுபோன்று நடக்கிறதுஇதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட வேலையில் ஒப்பந்த பணியில் தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
தற்காலிக ஆசிரியர்களை ரூ.10ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்த திட்டமிடும் அரசு பலஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பள்ளித் தேவைகளுக்கு எல்லா வகையிலும் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிய வாய்ப்புகளில் பணிமர்த்துவதில்லைபள்ளியை நடத்தும் அனுபவமும்கல்வித்தகுதியும்திறமையும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களை அங்கன்வாடிகளில்கூட பணியமர்த்தலாம்ஏன் எனில் உடற்கல்விஓவியம்தையல்இசைகணினி பாடப்பிரிவுகளில் நிரந்தரப்பணியில் உள்ள சிறப்பாசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தில் பணிமர்த்தப்பட்டுள்ளனர்ஆனால் அதேப்பாடப்பிரிவுகளை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் SSA திட்ட வேலையில் ஒப்பந்தப்பணியில் தொகுப்பூதியத்தில் பணிமர்த்தப்பட்டுள்ளனர்எனவே சிறப்பாசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட வேண்டிய இதேப் பாடப்பிரிவு ஆசிரியர்களை அரசு படிப்படியாக்கூட காலிப்பணியிடங்களில் நிரந்தரப்பணியில் அமர்த்தாமல் பாராமுகம் காட்டிவருவது எதிர்காலத்தை பாதிக்கின்றதுகல்விப்பணியில் உள்ள ஒப்பந்த தொகுப்பூதிய ஆசிரியர்கள் பட்டுவரும் அல்லல்களை தீர்த்திட அரசு முன்வரவேண்டும்.
ஏற்கனவே சட்டசபையில் கல்வி அமைச்சர் பகுதநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும்விரைவில் பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கோவிலூர் பொன்முடிபுவனகிரி சரவணன் ஆகியோர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்கல்வி அமைச்சர் சொன்னதை செய்திட முன்வரவேண்டும்.இதில் முதல்வர் நேரடி தீர்வு காணவேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2ஆயிரம் ஊதிய உயர்வை ஏப்ரல் மாதல் கணக்கிட்டு வழங்க மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சரால் மானியக்கோரிக்கை தினத்தில் அறிவித்துள்ளபோது பள்ளிக்கல்வித்துறை அறிவிக்காமல் விடுபட்டுபோன பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தம் மற்றும் சம்பள உயர்வை இனியும் தாமதக்காமல் இதே கூட்டத்தொடரில் முதல்வரின்110விதியிலாது வெளியிட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
26-8-2011ல் மறைந்த முதல்வர் சட்டப்பேரவை விதி எண் 110-ன்கீழ் அறிவித்த இந்த வேலையில் 30 மாதமாக ஆட்சி செய்யும் அதிமுக ஆட்சியின் புதிய முதல்வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சலுகைகளை அறிவித்து சிறப்பு செய்வாரா?.

இவன்,
சி.செந்தில்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
செல் : 9487257203.

18 comments:

  1. Government may give atleast 10% yarly increment as per Go,but the normal increment also not given to us yet,What type of government is this?

    ReplyDelete
  2. Aided school mbc science only female candidates location kanchipuram, contact 7868002044

    ReplyDelete
  3. ded school mbc science only female candidates location kanchipuram, contact 7868002044

    ReplyDelete
  4. Sathiyama manasu veruthu soilrom konjam vesam kuduga kudichi setharom

    ReplyDelete
    Replies
    1. கவலை படாதே நண்ப வேறு exam ட்ரை பண்ணுங்க

      Delete
  5. Intha achiyalara nambathinga mutrilum thirudan kootam...
    Oru exam kuda olunga nadatha theriyatha trb mudargal & kulla nari kootam.....

    ReplyDelete
  6. Posting ethukum kidyathunga.ivanunga podavum matanunga... mutrilum kalla kadhal..

    ReplyDelete
  7. தேர்வு எழுதி வெற்றி பெற்ற சிறப்பாசிரியர்கள் பணி நியமணம் பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை இதில் நீங்கள் எந்த தேர்வு எழுத முயற்சி செய்ய முடியும், அதனால் பயனோ அல்லது பணி நியமனமோ கிடைக்கத்தான் செய்யுமா?

    ReplyDelete
    Replies
    1. 1325 SPL teachers counselling eppa sir.2 years aachu.rembha pain na irrukku.eppa counselling 2 month aahuma? pls sollungal sir

      Delete
  8. வழக்கு நிலுவையில் உள்ளது இதற்க்கு காரணம் தற்காலிக List ல் உள்ளவர்கள் Case போட்டதுதான்

    ReplyDelete
    Replies
    1. உரிமை மருக்கப்பட்டவர்கள் உரிமையை பெற வழக்கு தொடுப்பது நியாயம் List ல் உள்ளவர்களின் நோக்கம் CPEd முடித்தவர்கள் உள்ளே வரகூடாது என்பதாகதானே தெரிகிறது

      Delete
  9. Part time சிறப்பாசிரியர்களின் CPEd தகுதி உடையவர்களின் எதிர்காலம் பற்றி மாநில தலைவரின் பதில்? ??

    ReplyDelete
  10. Part time சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும்போது அவர்களுக்குள் ஒரு தேர்வு வைய்த்துதான் செய்வார்கள் 2017 ல் TRB Exam எழுதி CV ல் 32 CEO வும் CPEd முடித்தவர்கள் ELIGIBLE என்று சொல்லியும் TRB தற்காலிக List ல் பெயர் சேர்க்கவில்லை

    ReplyDelete
  11. தேர்வு எழுதினால் பணி நியமணம் கிடைக்கும் என்று நம்பி தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிலும் தேர்வு பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் நியமணம் எப்போது என்று மாண்புமிகு முதல்வர் மாண்புமிகு கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்தி காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் நேர்மையான தகவலையும் வழங்கும் படி பணி நியமணம் கிடைக்குமா இல்லையா என்று மனப்போராட்டத்தில் இருக்கும் சிறப்பாசிரியர்கள் அணைவரும் கேட்டுக் கொள்கிறோம்

    ReplyDelete
  12. நிலுவையில் உள்ள 1325 சிறப்பாசிரியர் வழக்கு எப்பொழுது இறுதித் தீர்ப்புக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும் சார்.pls அதை பற்றி சொல்லுங்க சார்

    ReplyDelete
  13. அரசுக்கு நியமனம் செய்யும் எண்ணம் வந்தவுடன்

    ReplyDelete
  14. PGTRB chemistry supreme court SLP என்ன ஆயிற்று??

    ReplyDelete
  15. PGTRB - மதிப்பெண் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

    2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் சிறப்பு விடுப்பு மனு 05.07.2019 அன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் உச்சநீதிமன்றத்தில் , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்துள்ளது.எனவே தேர்வர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என வேண்டுகின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி