அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் விதியை மீறினால் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் விதியை மீறினால் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை


அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு வகுத்துள்ள விதிகளை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் பணிஎன்பது உயர்ந்த பணி. வகுப்பறைகளில் கற்பிப்பது என்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.

இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு கல்லூரிகளின் உதவி பேராசிரியர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.

21 comments:

 1. எல்லாம் சரி, அரசு கலை கல்லூரி பேராசிரியர்கள் போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்வுகள் நடத்துவார்களா?

  ReplyDelete
 2. Nadathuvaga nadathanum

  ReplyDelete
 3. Every post is made appointment through the first step of competitive exam, there after other things like experience, publication, ug,pg degree marks interview may be counted.

  ReplyDelete
 4. Corress la padicha unaku ena ..
  Nan set net pass panniruken, ugc approved university la padichuruken, ithuku mela ena thaguthi venum,
  U conduct trb exam and i will show my ebility, conduct open demo class also, i will prove my teaching skills.

  ReplyDelete
 5. Replies
  1. Do u have 30 laks rupees to buy job??
   Then support useless trb selection process. Otherwise join in exam based recruitment.

   Delete
 6. Adei 34 marks la 24 marks vechutu meethi 10 marks interview vechu edukura velai yaruku kidaikum, not the deserving candidates will get, only money having people.. keep in mind.

  ReplyDelete
 7. Recently Madras High court ordered open competitive exams for office assistant (peon) post also. I know the only one job till now no competitive exam is ARTS and Science college Assistant Professor post

  ReplyDelete
  Replies
  1. Inga competitive exam vendanu soldra payalunga elam yaru.. 24/34 marks vechutu irukavan than, oru post ku andha mathiri 1000 peru 24 marks vechutu line la nikkiran, meethi 10 marks ku?????
   Interview transparent ah nadakuma??
   Verum 10 marks vechu epdi teacher ah assess panna mudiyum, exam will be the better option for recruitment. I will file a case if they call for asst prof job as usual

   Delete
 8. கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுத வழி கட்ட வேண்டும். அவர்களே போட்டி தேர்வுகள் எழுதாமல் வந்தால் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். நீச்சல் தெரியாதவர்கள் எவ்வாறு நீச்சல் கத்து கொடுக்க முடியும். மாணவர்களே நீட், கேட், என பல தகுதி தேர்வுகள் மற்றும் தேர்வுகள் எழுதும் போது அதிக ஊதியம் பெறும் பேராசிரியர்கள் எப்படி போட்டி தேர்வுகள் இல்லாமல் தேர்வு செய்வது சரியாக இருக்கும். மாநில அளவில் மக்கள் அனைவரும் தெரிய வேண்டிய விஷயம் இது. பல பேருக்கு இந்த விஷயம் அதிசயமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Kandipa indha point vechu kooda case podalam sir ,
   Ssc, rrb, bank exam, rbi, sbi, upsc, tnpsc, net, slet, gate, jest, tifr, cat, mat, zat, toefl, gre nu 1000 competitive exam iruku, athuku skill development panni kudukura vathiyar matum neraa varanumam. Enna niyayam ithu.

   Delete
 9. மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பார்கள்.(என திருத்தி வாசிக்கவும்)

  ReplyDelete
 10. லூசுத்தனமான தீர்ப்பு தொலைதூரக் கல்வி பயின்றவர்களுக்கு உதவிப் பேராசிரியராக பணிபுரிய தகுதி இல்லையா தொலைநிலை கல்வியில் தான் பயின்றேன் நெட் slet இரண்டும் தேர்வு பெற்று இப்பொழுது அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன் நான் தகுதியற்றவனா

  ReplyDelete
  Replies
  1. I also pg distance and set passed, ctet passed. Qualifed teacher as per existing norms. What the hell with this ???

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி