School Morning Prayer Activities - 01.08.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2019

School Morning Prayer Activities - 01.08.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.08.19

திருக்குறள்


அதிகாரம்:புலான்மறுத்தல்

திருக்குறள்:251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

விளக்கம்:

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

பழமொழி

 Practice makes perfection.

 சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.

2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.

பொன்மொழி

நாம் வசிக்கும் இடம்  தொடர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும் எனில் இடைவிடாது சுத்தம் செய்ய வேண்டும். அக சுத்தமும் இதில் விதிவிலக்கல்ல....

 -----பரமஹம்சர்

பொது அறிவு

1.'தமிழகத்தின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் நகரம் எது?

 மதுரை( காரணம்:மீனாட்சி அம்மன் கோவில்  நகரின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு மதுரையின் மத்தியில் கட்டப்பட்டுள்ளது)

2.'தமிழ்நாட்டின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் பகுதி எது ?

வால்பாறை (தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படும் பகுதி)

English words & meanings

1. Night queen - a flower plant which blooms at night. பவளமல்லி
1. இது பவளம் போன்ற சிவப்பு வண்ண காம்பும் வெண்மை நிற இதழும் கொண்டது.
2. இது தாய்லாந்து நாட்டில் உள்ள காஞ்சனபுரியின் மாநில மலர் ஆகும். இதற்கு சேடல் என்ற பெயரும் உண்டு.

ஆரோக்ய வாழ்வு

மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Some important  abbreviations for students

*GHGE  -   GreenHouse Gas Emissions

* CFC  -   Chloro Fluoro Carbon

நீதிக்கதை

பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான்.அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம்.தேங்காய்.கற்பூரம் ஆகியன இருந்ததன.

தேங்காய் பேசஆரம்பித்தது.நம்மூவரில் நானே கெட்டியானவன்.பெரியவனும் கூட! என்றது.

அடுத்து வாழைப் பழம்.நமது மூவரில் நானே இளமையானவன்.இனிமையானவன்.என்று பெருமைப்பட்டுக் கொண்டது கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

பக்தன் சந்நியை அடைந்தான்.தேங்காய் உடையப்பட்டது பழம் தோல்உரிக்கப்பட்டது.கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஓன்றும் இல்லாமல் போனது.

பக்தர்களாகிய நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால்.ஒருநாள் நிச்சையம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்து விட்டால்.இருக்கும் வரை ஔிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.


வியாழன்
அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் பருகியிருப் பீர்கள். அந்த உறிஞ்சுகுழல் எப்படிச் செயல்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? ஒரு  சோதனை செய்து பார்க்கலாமா?

என்னென்ன தேவை?
ஒரு நீருள்ள கண்ணாடி தம்ளர், இரு உறிஞ்சு குழல்கள்
செயல்பாடு
* இரு குழாய்களில் ஒன்றை எடுத்து அதில் ஒரு ஊசியால் துளை இடவும்.
* முதலில் துளை இல்லாத உறிஞ்சு குழல் மூலம் நீரை உறிஞ்சவும். நீர் தங்கு தடையின்றி வரும்
* பின்னர் துளையிடப்பட்ட குழாய் மூலம் உறிஞ்சவும்
* இப்போது நீர் வராது
காரணம் :
நாம் துளையிடாத குழலில் உறிஞ்சும் போது அங்கு வெற்றிடம் உருவாகிறது. நீர் மீது வளிமண்டல அழுத்தம் ஏற்பட்டு அது நீரை உறிஞ்சு குழலுக்குள் தள்ளுகிறது. ஆனால் துளையிடப்பட்ட குழலுக்குள் துளை வழியாக காற்று சென்று விடுவதால் அது நீர் மேலே வராமல் தடுத்து விடுகிறது.

கணினி சூழ் உலகு

தமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் மின்னட்டைகளை தயார் செய்து விளையாட உதவும் ஒரு செயலி





இன்றைய செய்திகள்

31.07.2019

* சோலார் எனர்ஜியில் இயங்கும் 'MOZI 2' என்ற ஆளில்லா விமானம் சீனாவில் தயாரிப்பு: சோதனை ஓட்டம் வெற்றி!

* நாட்டிலேயே முதல்முறையாக பதவியில் உள்ள நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி.

* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*  கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பின் முதன் முறையாக சர்வதேச ஒபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் கோப்பை வென்றார் தமிழகத்தின் பிரக்னநந்தா.

* மெக்சிகோவில் நடக்கும் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.

Today's Headlines

🌸 Solar Energy's 'MOZI 2' unmanned aeroplane product was manufactured in China    and drived successfully in test drive

 🌸 For the first time in India a case was filed  against the judge who was in the post .

 🌸Tamilnadu government released the order that the Payment of deduction for students who study in English medium in Government school

 🌸Praknananda of Tamil Nadu won the championship trophy in the International Open Chess Championship for the first time after the  Grandmaster title

 🌸 Kunneswaran won the first round of the International Open tennis tournament in Mexico.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி