School Morning Prayer Activities - 09.07.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2019

School Morning Prayer Activities - 09.07.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.07.19


திருக்குறள்

அதிகாரம்:புகழ்

திருக்குறள்:234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு.

விளக்கம்:

இனிவரும் புதிய உலகம்கூட, இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றாது.

பழமொழி

Faith is the force of life

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

இரண்டொழுக்க பண்புகள்

1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.

2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன். 

பொன்மொழி

ஒருவருக்கு பெருமைத் தேடித் தருவதும் ,
புகழ்பெற்ற மாமனிதராக உருவாக்குவதும் அவரது செயலாக்கத் திறன் என்பதில் ஐயமில்லை....

--- தாமஸ் ஆல்வா எடிசன்

பொது அறிவு

1. இந்தியாவின் முதல் (முழுநேர) பெண் நிதியமைச்சர்  யார்?

திருமதி.நிர்மலா சீதாராமன்
(திருமதி. இந்திரா காந்தி அம்மையார் முதல் (பகுதி நேர) பெண் நிதியமைச்சர்)

2. உலகிலேயே மிகக் குறைவாக வரி விதிக்கும் நாடு எது?

ஜப்பான்

English words & meanings

Vase - a open jar used to hold flowers, பூ ஜாடி

Vacation - a period of time a person used to enjoy or relax, விடுமுறை காலம் 

ஆரோக்ய வாழ்வு

சர்க்கரை  நாேய் உள்ளவர்கள்  தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாகச்  சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும்.

English words & meanings

* AC - Air Conditioner

* TV - Television

நீதிக்கதை

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் ‘அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் ‘வாக்கிங்’ போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ‘இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு’ என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. ‘நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி’ என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். ‘மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?’ என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. இம்தாதிரியான மூடநம்பிக்கைகளை நம்பி கடமையை செய்யாமல் இருந்து விட்டோமே என்று புரிந்தது. நம்மீது நம்பிக்கை வைத்தால் எல்லாமே நன்மையாகதான் நடக்கும் என புரிந்து செயல்பட ஆரம்பித்தான்.

செவ்வாய்

English & Art

Think & write

1. My kids _ _ _ already gone to bed when I got home. (3 letters)

 *did
* had
 *was

2. Can you think _ _ the missing word in this sentence? (2 letters)

 of
 up
 on

3. In soccer, the only players who can _ _ _ _ _ the ball are goalkeepers. (5 letters)

 touch
 catch
 throw

4. I looked everywhere, but I _ _ _ _ _ not find my keys. (5 letters)

 would
 might
 could

5. How long is an Olympic-sized swimming _ _ _ _ ? (4 letters)

 pond
 pool
 race

இன்றைய செய்திகள்

09.07.2019

* நாட்டிலேயே வறட்சியான நகர்ப்பகுதிகளை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்.

* பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 

* பிபா பெண்கள் உலக்கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா கோப்பையை வென்றது.

* போலந்து நாட்டில் நடைப்பெற்ற கிராண்ட் பிரிக்ஸ் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

Today's Headlines

🌸 Tamil Nadu tops inthe list of drought-hit cities in India :informed by central government

 🌸The website for engineering student admission is paralyzed due to a technical problem.

 🌸 Counselling for MBBS and BDS courses commenced from today.

 🌸The United States beat the Netherland in the final match of the FIFA Women's football World Cup.

 🌸 Hema Das won two gold medals in a single week in the Grand Prix 200m race in Poland.

Prepared by
Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. News is not clear at the end please give full news correctly sir. thank you.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி