TN Schools attendance appல், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

TN Schools attendance appல், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி?


👉TN Schools attendance app தற்போதைய வெர்ஷனை அப்டேட் செய்து, தலைமை ஆசிரியருக்கான(17 இலக்க எண், user name ஆகவும், தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் Pass word) Log in வழியாக உட்புகவும்.

👉ஒரு ஆசிரியர் இன்று விடுப்பில் இருந்தால், அவர் பெயருக்கு நேராக உள்ள P என்பதை தொட்டால், *P*, *A* *L* என்ற மூன்று எழுத்துக்கள் தோன்றும்.

👉P என்பது Present என்பதையும்,
     A என்பது Absent என்பதையும்,
    L என்பது விடுப்பையும் குறிக்கும்.

👉L என்பதை தேர்வு செய்து, எந்த வகை விடுப்பு அல்லது OD என்பதை பதிவு செய்து,

👉 மற்றவர்களுக்கு P என்ற நிலையில் சமர்ப்பிக்கவும்.

👉அடுத்த நாள், விடுப்பிலிருந்த ஆசிரியர் பணிக்கு வந்திருந்தால், இந்த செயலியில் விடுப்பு எனக் காட்டும்.

👉 இந்த சூழலில், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Students DATA அருகில் உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியை தொடவும்( update செய்ய).

👉அதன் பின் கேட்கப்படும் தகவலுக்கு Ok என்பதை தொடவும்.

👉இதன் பின் fetching
மற்றும் configuring  ஆகும்.

👉இதன் பின், ஆசிரியர்கள் ஐகானை தேர்வு செய்து, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

👉தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்தால், பொறுப்பு தலைமை ஆசிரியர் தன்னுடைய கைபேசியில் உள்ள Attendance செயலியில் Log Out செய்து, தலைமை ஆசிரியரின் 17 இலக்க அடையாள எண் மற்றும் கடவுச்சொல் வழியாக Login செய்து,

👉 ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கும் போது, அவர் Log Out செய்த பின், பொறுப்பு தலைமை ஆசிரியர் Log in செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி