10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு!


கிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த விவரங்களை பார்க்கையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதேநேரம், 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1, 238 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 1, 531 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 293 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்டதாக மாறியுள்ளது. அதே நேரம் 70% பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 50 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் தலா 3 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை. நீலகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை

கிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் கல்வி தருவது சமூக அந்தஸ்து என்ற மாயை உருவாகி இருப்பதே முக்கிய காரணமென்று வல்லுநகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. தனியார் பள்ளி செல்வது மாயை அல்ல. வேறு வழி இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி