10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் - kalviseithi

Aug 20, 2019

10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து  மாநில அரசுப் பல்கலைக் கழகங்களை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கேட்டுக்கொண்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் புதிய இடஒதுக்கீட்டு நடைமுறையை உடனடியாக நிகழ் கல்வியாண்டிலேயே (2019-20) அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாநில அரசு செயலர்களுக்கு சுற்றறிக்கையையும் யுஜிசி திங்கள்கிழமை அனுப்பியுள்ளது.
அதில், இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்களின் பட்டியலையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. 10% சமூக நீதிக்கு எதிரானது...
    தமிழ் நாட்டில் தலைகீழாக நின்று தண்ணீர் குதித்தாலும் வாய்ப்பு இல்லை....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி