மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2019

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி


மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் மூன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இணையதளங்களில்... மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) ஜூலை 7-ம் தேதி நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,942 மையங்களில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-1) 13 லட்சத்து 59 ஆயிரத்து 478 பேர் எழுதினர். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-2) 10 லட்சத்து 17 ஆயிரத்து 553 பேர் எழு தினர். தேர்வு முடிவுகள் பின்வரும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. www.ctet.nic.in www.cbse.nic.in முதல் தாளில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 658 பேரும் 2-வது தாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 172 பேரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 830 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சிபெற்றவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் டிஜிலாக்கரில் (Digilocker) பதிவேற்றம் செய்யப்படும். அதிலிருந்து சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லாக்-இன், பாஸ்வேர்டு விவரங்கள் தேர்வர்களின் செல்போன் எண்ணுக்கு எம்எஸ்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 சி-டெட் தகுதித்தேர்வின் முடிவு கள் தேர்வு முடிந்த 23 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சிக் கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 90. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) 82 மதிப் பெண் ஆகும். இத்தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகளில்இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சிடெட் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

3 comments:

  1. I got 84 Mark's in paper 1....

    ReplyDelete
  2. Pg Trb commerce friends nala padinga 9952636476. 20 units plus psychology and education classes

    ReplyDelete
  3. அப்ப மாநில அரசுகள் நடத்திtet,trbபோன்ற தேர்வுகளின் முடிவுகளைக் காலம் தாழ்த்தி,காலம் தாழ்த்தி கடைசியில் அனைத்து அதிகாரமும் மேலே போகும் வரைக்கும் வெறும் வேடிக்கை பார்த்து விட்டு
    நாங்கள் என்ன பண்ணுவது
    Neer,நாங்ககளாலா கொண்டுவந்தோம் என்று மற்றவர்களை குற்றம் சாட்ட மற்றவரோ நாங்கள் தெரியாமல் அனுமதித்ததை நீங்கள் ஏன் நடைமுறை படுத்தீகின்றீர்கள் என்று மாற்றி மாற்றி குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் வைத்துக்கொண்டு,
    கடைசியில் கல்வி உரிமை மாநில அரசுகளின் கையிலிருந்த சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு தரம், உழல்,இட ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மத்தியில் கொண்டு சென்று அனைத்து விதமான மக்களின் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரே நாடு ஒரே கல்விக்கொள்கை,ஒரே ஆசிரியர் தகுதி தேர்வு வரைக்கும் கொண்டு சென்றாலும் இங்கே குடும்பிப்பிடி சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டிய தான்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி