ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரிவிலக்கு - வருமான வரி செலுத்துவதில் புதிய நடைமுறை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2019

ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரிவிலக்கு - வருமான வரி செலுத்துவதில் புதிய நடைமுறை !

வருமான வரி விகிதங்களை மாற்றுவது குறித்து அகிலேஷ் ரஞ்சன் குழு ஆய்வறிக்கை தாக்கல்.அதன்படி நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் குறைத்து பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்.

தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

இதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% அதற்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி கட்டமைப்பை 5 விகிதங்களாக பிரிக்க அகிலேஷ் ரஞ்சன் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரிவிலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 10% -மாகவும்,  அதற்கு மேல் 20%-மாகவும் வரி விதிக்க பரிந்துரை.

புதிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் மத்திய அரசின் வருவாயில் ரு.50 ஆயிரம் கோடி வரை குறைய வாய்ப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி