ஜாக்டோ-ஜியோ செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2019

ஜாக்டோ-ஜியோ செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் அறிவிப்பு.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

நியாயமானகோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தொடர்ந்து, செப்டம்பர் 13-ஆம் தேதி கல்வி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 24-ஆம் தேதிமாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும். முன்னதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

7 comments:

  1. நீங்க போரட்டம் பண்ண போயி புதுசா யாருக்கும் வேலை கொடுக்கமாட்றாங்க...

    ReplyDelete
    Replies
    1. Already irukkaravangulukke velai illa solranga idhula enga pudhusa velai????

      Delete
  2. Urimaikkana poraattam endru anaivarukkum theriyapaduthungal.

    ReplyDelete
    Replies
    1. போன முறை 17B மட்டும் தான். இந்த முறை உங்களோட டவுசர் கலட்டி ஓட விட poranunga. மரியாதையா இருக்கிற வேலைய காப்பாத்திக்கிங்க.

      Delete
  3. தனியார் பள்ளிகளில் 5 க்கும் 10க்கும் வேலை செய்யுறவங்கள நினைச்சு பாருங்க நீங்க..

    ReplyDelete
    Replies
    1. Tet,Trp pass pana sollunga neraiya kodupanga

      Delete
  4. இந்த போராட்டங்களில் அரசியல் பின்னணி உள்ளது.. எதிர்கட்சிகளின் தூண்டுதலால் இவர்கள் செய்யும் போராட்டங்களால் பல இளைஞர்களின் வாழ்க்கை வீணாகிறது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி