7 மாவட்ட ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2019

7 மாவட்ட ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.*_

இதற்காக அங்கன்வாடி மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2,381 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்கிய மழலையர் வகுப்புகளில் 65,000 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், திருச்சி,கரூர், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, 46 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் நூலகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை தொடக்க கல்வித்துறை நடத்திய கணக்கெடுப்பில் 7 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. அதற்கு தனியாக ஆசிரியர் போடுங்கடா எல்லோரும் சேர்பாங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி