பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2019

பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


பிளஸ் 2 வகுப்புக்கு வழங்குவது போன்று மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

மாணவர்களின் ஒழுக்கம், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் தொடர் வகுப்பறை ஈடுபாடுகளின் தொடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடாக (ஐய்ற்ங்ழ்ய்ஹப் ஙஹழ்ந்) 10 மதிப்பெண்கள்வழங்குவது போன்று 10- ஆம் வகுப்புக்கும் அகமதிப்பெண் வழங்க வேண்டும். இதன் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் பங்கேற்க வழிவகுக்கும். அகமதிப்பீடு வழங்கப்படுவதால் மாணவர்கள் தங்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அகமதிப்பீடு மதிப்பெண்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ப முயற்சியினை துரிதப்படுத்தும் போது ஆர்வத்துடன் கற்றல் செயல்பாடுகள் வெற்றி பெறும்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் நூறு சதவீதம் வெற்றி பெற உதவும். எனவே பிளஸ் 2 வகுப்புக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்குவது போன்று 10- ஆம் வகுப்புக்கும் வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. எல்லோருக்கும் 10 மதிப்பெண் போட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி