காலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள் - தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

காலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள் - தேர்வுத்துறை


காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொதுதேர்வு வினாத்தாள் அமையும்' என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், வினாத்தாள் எப்படி இருக்கும் என, தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பும். ஆனால், இந்த ஆண்டு, வினாத்தாள் எப்படி இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், வினாத்தாள் முறை குறித்து, தேர்வு துறை வட்டாரத்தில் விசாரித்த போது, 'காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையிலேயே, பொது தேர்வு வினாத்தாள் அமையும்' என, கூறப்படுகிறது.காலாண்டுதேர்வுக்கான வினாத்தாள்களை, தேர்வு துறையே தயாரித்து வழங்குவதால், அதில், கேள்விகள் இடம் பெற்றுள்ள முறைகளை, மாணவர்கள் பார்த்து, அதற்கேற்ப தயாராக வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி வழியாக, விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என, தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. செய்தி வெளியும் அன்பர்களுக்கு வணக்கம். பொதுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையில் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் அமைக்கப்படுமா அல்லது காலாண்டுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையில் பொதுத் தேர்வு வினாத்தாள் அமைக்கப்படுமா எது சரி விளக்கம் வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி