சிறப்பாசிரியர் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை மாணவர்களின் தனித்திறன் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு  - kalviseithi

Aug 11, 2019

சிறப்பாசிரியர் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை மாணவர்களின் தனித்திறன் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு 


அரசுப் பள்ளிகளில் இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் படிப்பு களுக்கான பாடத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்ப தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன.

தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 46 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின் றனர். இதற்கிடையே பள்ளி மாண வர்களிடம் புதைந்துள்ள இசை, ஓவியம் போன்ற தனித்திறன்களை வெளிக்கொணரும் விதமாக சிறப்பாசிரியர்களை கல்வித் துறை நியமனம் செய்தது.அதன்படி மாநிலம் முழுவதும் 3,200 சிறப்பாசிரியர்கள் பணிபுரி கின்றனர். இவர்கள் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய 4 படிப்புகளைக் கற்று தருவர்.இதுதவிர பகுதிநேர சிறப்பா சிரியர்கள் மூலம் கட்டிடக் கலை, வாழ்வியல் திறன், கணினி, தோட்டக்கலை உள் ளிட்ட தொழிற்கல்வி படிப்பு களும் மாணவர்களுக்கு கற்று தரப்படுகின்றன.இந்நிலையில் சிறப்பாசிரி யர் படிப்புகளுக்கு இன்னும் பாடத் திட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதாக கல்வியாளர்கள், பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் கூறும் போது, ‘‘இசை, ஓவியம், தையல் மற்றும் உடற்கல்வி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு பிரத்யேக பாடத்திட் டத்தைத் தயாரிக்க வேண்டு மென அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதையேற்று தனிக்குழு அமைத்து பல்வேறுசிறப்பு அம்சங்களுடன் சிறப்பாசிரி யர் படிப்புக்கான பாடத்திட்டத்தை 2017-ம் ஆண்டு கல்வித்துறை வடிவமைத்தது.தொடர்ந்து புதிய பாடத்திட் டத்தை இணையதளத்தில் வெளி யிட்டு, இதை அனைத்து பள்ளிகளி லும் அமல்படுத்த உத்தரவிடப் பட்டது. ஆனால், புதிய பாடத்திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வர வில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை மட்டும் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.இப்போதைய காலகட்டத் துக்கு ஏற்ப மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுப் பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிறப்பாசிரியர்களுக்கு எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படுவ தில்லை’’ என்றனர்.இதுகுறித்து கலை ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும் போது, ‘‘சிறப்பாசிரியர் பாடங் களுக்கு கல்வித் துறை உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை.

இத்தனைக் காலமும் பாடத் திட்டம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சியின்போது படித்தவற்றை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டியுள்ளது.இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய 4 படிப்புகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சற்று கடினமாக இருந் தாலும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும்விதமாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதை ஒரு சுற்றறிக்கை மூலம் நடைமுறைபடுத்த அரசு தாமதப் படுத்துவதன் காரணம் புரிய வில்லை.மேலும், தோட்டக்கலை உள் ளிட்ட இதர பாடங்களுக்கும் பாடத்திட்டம் இல்லை. இதனால் சிறப்பா சிரியர் பாடவேளைகள் என்றாலே மாணவர்களுக்கு ஃப்ரி பிரியட் போல ஒய்வு நேரமாகிவிட்டது.ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய பாடத்திட்டத்தை வெளியிட்டு அதற்குரிய புத்தகங்கள் வழங்கி னால்தான் கற்றல் பணி சிறப்பான தாக இருக்கும்.

இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் செல் போன் வழியாகவே பல்வேறு தக வல்களை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.ஆனால், இன்னும் பழைய பாடமுறைகளையே நடத்தினால் மாணவர்களிடம் இருக்கும் தனித் திறன், ஆர்வம் வெளிப்படாமல் போய்விடும். சமீபகாலமாக தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வரு கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.சிபிஎஸ்இ போல அனைத்து வகை சிறப்பாசிரியர் பாடங்களுக் கும் பாடத்திட்டத்தை கல்வித்துறை அமல்படுத்த முன்வர வேண்டும். இல்லை என்றால் அரசுப் பள்ளி களில் சிறப்பாசிரியர் பாடங் களின் எதிர்காலம் கேள்விகுறியாகி விடும்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி