மீண்டும் நீருக்குள் பயணப்பட்டார் அத்திவரதர்.. ( படித்ததில் பிடித்தது) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2019

மீண்டும் நீருக்குள் பயணப்பட்டார் அத்திவரதர்.. ( படித்ததில் பிடித்தது)


மீண்டும் நீருக்குள்
பயணப்பட்டார்
அத்திவரதர்..

நாற்பது வருடமாக அவருக்கு
நீருக்குள்  இல்லாத  மூச்சுதிணறல் கட்டாயம்  இந்த 48 நாட்களில்
இருந்திருக்கும்..

அண்ணா நினைவிடம்
பார்க்காதவர்களை
அத்திவரதர்
தன் செலவில்
அழைத்துவந்து
காண்பித்தார்..

வரதரை பார்த்தவர்கள்
அவரை நினைத்துக்
கொள்வர்..
வராதவர்களை
அவர் நினைத்துக்
கொண்டார்..

லட்சங்களில்
புரண்ட ஜவுளிகள்..

பல ஆயிரங்களில்
லாபம் பார்த்த ஓட்டல்கள்..

தங்கும்அறைகளின்
வாடகை தங்கம்
போல விலை உயர்ந்த
கதைகள்..

கோடிகளில் கொழுத்து பெருத்த கோயில்
உண்டியல்கள்..

தட்டில் விழுந்த
தங்கம்,வெள்ளி
காணிக்கைகளில்
திருப்பதியே
திரும்பி பார்த்த அதிசயம்

எல்லாம்
எல்லாம் இப்போது
இவர் நினைவுக்குள்
மூழ்குகின்றன..

டன் கணக்கில்
விழுந்த குப்பைகளில்
ஆயிரக் கணக்கான
காலணிகளில்
கோயில்
நகரம்
குப்பை நகரமாகாமல்
காத்த துப்புரவு
தொழிலாளிகளை கைகூப்பி தரிசித்தபடியே குளத்துக்குள் போகிறார்
அத்திவரதர்..

தனக்காக இரவும்
பகலும்
சரியாக உண்ணாமல்
உறங்காமல்
வீட்டுக்குகூட  செல்ல
நேரமில்லாமல்
காவல் காத்த
காக்கி உடைகளுக்கு
தன் அனைத்து
பட்டுஉடைகளையும் பரிசளித்தபடியே
குளத்தில் இறங்குகிறார் வரதர்..

ரவுடி
விஐபி
ஆனது
இவரின் கரிசனம்தான்..

பொதுமக்களுக்கு
மூச்சுமுட்டும்
ஆறுமணி நேர
காத்திருப்பு..
அரசியல்வாதிக்கு
உடனே தரிசனம்..
சங்கு சக்கரம்
இருந்தும் என்ன பயன் என்று?
அதை மட்டும் தடுக்கமுடியாமல்
நொந்துகொண்டார்..

தரிசிக்க 'அவர்' வந்தார்
'இவர்' போனார்
என்ற  செய்திகளின் பசிக்கு
அத்திவரதர் மூன்று வேளையும் தீனி
போட்டார்..

கடைசியாய்
வந்த நயன்தாராவின்
வட்ட வட்ட நினைவுகளுடன்
குளத்துக்குள்
இறங்குகிவிட்டார்
அத்திவரதர்..

ஏனோ மனம்
இப்போது பழகிய
காதலியை பிரிந்தது
போல
அத்திவரதரை நினைத்து
கஷ்டப்படுகிறது..

அவர் வெளி
வந்த போது
தண்ணீர் பஞ்சம்..
குளத்துக்குள் போனதும்
முழுக்க முழுக்க
நனைந்துவிட்டது
பூமியின் நெஞ்சம்..
சரி
அதை சேர்த்துவைக்க
நீ என்ன செஞ்ச?
என்ற கேள்வியை நமக்காக
கரையில் வைத்துவிட்டு
நாற்பது வருடம்
கழித்து வருவதாக
போயிருக்கிறார் கொஞ்சநாள்
காஞ்சிபுரத்தின்
கதாநாயகனாக இருந்த
அத்திவரதர்..

ந.வீரா
திமிரி.

3 comments:

  1. Kadaisiyaka vantha nayantharava Athi varathar napakam vachirukaro ennavo Veera nalla napakam vachirukar.Konja naal hero illa Epavume Athivarathar HERO than...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி