அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம் - kalviseithi

Aug 5, 2019

அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்


அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்த, பொது சுகாதார இயக்குனர், குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்புக்குள்ளாகி, பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி, கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான, தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிட்டார்.கோவை அரசு மருத்துவமனை, 'டீன்' அசோகன் கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, நோயாளிகளின் உடல் நலன் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். மலையோர பகுதிகளில், இரண்டு முதல் மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக, முகாம் நடத்தவும், இயக்குனர் உத்தரவிட்டார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு, எட்டு நர்ஸ்கள், ஐந்து டாக்டர்களை கூடுதலாக நியமிக்கவும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், தடுப்பூசி முகாம் நடத்தவும் அறிவுறுத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி