தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2019

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது;

தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி