அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் - kalviseithi

Aug 14, 2019

அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப்பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது.

இதைதடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்த அளவுக்கு சேர்க்கை இல்லை. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வியின் தரத்தை  உயர்த்தவும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளை மாற்றி அமைத்துள்ளார்.இதையடுத்து பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். அதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாணவர் சேர்க்கையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த வட்டார வள மையங்களை சமக்ரசிக் ஷா திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 400 வட்டார வள மையங்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பள்ளிகளை ஒன்றிணைத்து குறுவள மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுக்கு நடுநிலைப் பள்ளிகள்தான் தலைமையிடமாக இருந்தன.தற்போது, அந்த குறுவள மையங்கள் மேனிலைப் பள்ளிகளை மையமாக கொண்டு செயல்பட உள்ளன. இதுபோன்ற பணிகள் முடிந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் மாற்றங்கள் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் முடிவு செய்துள்ளார்.

இதன்படி அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக கண்காணிக்கமுடியும். அதற்காக புதிய செயலியை உருவாக்கவும் உள்ளனர். இதனால் ஒவ்வொரு மணிநேரமும் பள்ளிகளின் நிலையை நேரடியாக கண்காணிக்க முடியும். தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தனிப்பட்ட வகுப்பில் மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும். அதனால் ஆசிரியர்களோ, மாணவர்களோ ஏமாற்ற முடியாது.

3 comments:

  1. தரம் உயராமல் இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தவறுகளுக்கு பொறுப்பேற்று பணி ஓய்வு பெற்றுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு அதிகாரியும் அவனவன் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு கல்வித்துறை என்ன அவன் வீட்டு சமையலறையா? கவனம் தேவை. யாரிடம் கேட்டு இந்த மாற்றங்கள் செய்கிறார்கள்? வர வர கண்ட வானல்லாம் கண்டபடி மாற்றம் செய்ததன் விளைவுதான் இந்த கல்வித் தர நிலை சீர்கேடு.

    ReplyDelete
  2. ஒடிந்த கல்வித்துறையை நிமிர்த்த முடியாது
    மாணவர்களின் நலனை மட்டுமே கணகில் கொண்டு உறுதியான நடவடிக்கை தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி