எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் எம்.சி.ஏ. கலந்தாய்வு தொடங்க உள்ளது.
2019- 20 -ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட கல்லூரி முதல்வரும், கலந்தாய்வு செயலருமான பெ.தாமரை கூறுயதாவது:
டேன்செட் 2019 மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட எம்.சி.ஏ. தரவரிசைப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த எஸ்.அர்ச்சனா 73.667 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மதுரையைச் சேர்ந்த ஜெ.தர்ஷினி 72.667 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஏ.பிரதீப்ராம் 66 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதேபோல, எம்.பி.ஏ. தரவரிசைப் பட்டியலில், 82 மதிபெண்கள் பெற்ற கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.ஸ்வரூபா முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த ஏ.கார்த்திகாபிரியா 81.33 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த பி.பிரசன்னகுமார் 79 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். எம்.சி.ஏ. பாடப் பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், எம்.சி.ஏ. பிரிவில் ழ்ங்ஞ்ன்ப்ஹழ் மற்றும் ப்ஹற்ங்ழ்ஹப் ங்ய்ற்ழ்ஹ் ஆகிய இரு வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும். எம்.பி.ஏ. பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு வருபவர்கள் பொதுப் பிரிவினர் ரூ.5,300, எஸ்.சி/எஸ்.டி/எஸ்.சி.ஏ பிரிவினர் ரூ.1,150 வரைவோலையாகவோ அல்லது பணமாகவோ கொண்டு வர வேண்டும். எம்.சி.ஏ. பாடப் பிரிவுக்கான துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 -ஆம் தேதியும், எம்.பி.ஏ. பாடப் பிரிவுக்கு ஆகஸ்ட் 28 -ஆம் தேதியும் நடைபெறும். பொதுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ள இயலாதவர்கள், பஅசஇஉப 2019 தேர்வு எழுதி இதுவரை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் அனைவரும் தங்களது அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணம் ஆகியவற்றுடன் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நேரிடையாக கலந்தாய்வு மையத்துக்கு வந்து துணைக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
10 ஆயிரம் இடங்கள் உள்ள எம்.சி.ஏ. படிப்பில் சேர 1,607 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதேபோல, 10 ஆயிரம் இடங்கள் உள்ள எம்.பி.ஏ. பாடப்பிரிவில் சேர 6,755 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளதன் காரணமாக மாணவர்களுக்கு இந்தப் பாடப் பிரிவில் சேர்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி