'ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2019

'ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்!


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (15.08.2019) சிறப்பாகக் கொண்டாடப்பட்ட 73 ஆவது விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன்  என்பார் தினமணி,  இந்து தமிழ் திசைஜனசக்தி நாளேடுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும்  ஆசிரியரின்றி  அமையாது கல்வி என்னும் நூலை மேலகண்டமங்கலம் பள்ளி மாணவர் மன்ற தலைவர் வினோதா, துணைத் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் வெளியிட்டு மகிழ்ந்தனர். 

இந்நூலை மாணவர்கள் வெளியிடுவதுதான் மிக பொருத்தமான செயலாக இருக்கும் என்பதால் இந்த இனிய நன்னாளில் மறுவெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது எனக்குப் பெருமகிழ்ச்சி என்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக நூலாசிரியர் மணி கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி