பொதுத்துறை அரசு நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு! - kalviseithi

Sep 28, 2019

பொதுத்துறை அரசு நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு!


மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன் படி போனஸ் பெற உச்ச வரம்பு என்பது 21,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019ம் ஆண்டிற்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

மேலும், போக்குவரத்துறை, டி.என்.இ.பி, தமிழ்நாடு தேயிலை கார்ப்பரேஷன், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்ரேஷன், நிர்வாகத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று தனித்தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி