தினக்கூலியைவிட குறைவாக ஊதியம் பெறும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்:- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

தினக்கூலியைவிட குறைவாக ஊதியம் பெறும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்:-

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த வேண்டும்  என்று தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு நியமித்தார்.
விதிமுறைகளின்படி பகுதிநேரம் என்பது வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணிபுரிய வேண்டும் என்பதாகும்.
நான்கு பள்ளிகளிலே இதே அடிப்படையில் பணிவழங்கப்பட்டால் இப்பகுதிநேரப்பணி முழுநேரமாக முழுமையடையும். 
எனவே 9 கல்வி ஆண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை அரசாணையில் ஆணையிட்டுள்ளபடி நான்கு பள்ளிகளில் பணியமர்த்தி அதிகபட்ச சம்பளத்திற்கு புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஒரே பள்ளியில் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரமாக பணிவழங்க வேண்டும். 
இப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒருங்கிணைந்த கல்வி என மாறிவிட்டது. பள்ளிகளும் ஒரே அலகின்கீழ் ஒருங்கிணைப்பட்டு வருகிறது. எனவே இதனை கல்வித்துறை அதிகாரிகளும் கல்விஅமைச்சரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி நடைமுறைப்படுத்தவேண்டும்.
மத்திய அரசு ஊதிய சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. மேலும் தற்போது சமவேலை சமஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் நிரந்தர ஊழியர்களுக்கும் அதே வேலையை செய்யும் தற்காலிக ஊழியர்களுக்கம் ஒரே சம்பளம் தரவேண்டும். பகுதிநேர ஆசிரியர்களாக நாங்கள் இத்திட்ட வேலையில் பணியமர்த்தப்பட்டு இருந்தாலும் இதே பாடங்களில் நிரந்தரப்பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எங்களுக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு போனஸ் தரவில்லை. இறந்தவர்கள் குடும்பங்களுக்கும் 58 வயதால் பணிஓய்வில் சென்றவர்களுக்கும் அரசின் நிதிஉதவி இல்லை. ஆண்டு வாரியாக ஊதியஉயர்வு சரிவர தரப்படவில்லை. 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பளஉயர்வும் தரவில்லை.

 வருங்கால வைப்புநிதி, இன்ஷீரன்ஸ் எதுவும் இல்லை. மகப்பேறு கால விடுப்பு மற்றும் இதர விடுப்பு சலுகைகளும் இல்லை. ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு தரும் ரூ.14203 அதிகமான சம்பளமும் தமிழத்தில் தரவில்லை. ஒட்டுமொத்தத்தில் அரசின் பணபலன்களை பெறமுடியாமல் தற்போது தரப்படும் ரூ.7ஆயிரத்து 700 குறைந்த தொகுப்பூதியத்தில் ஏறிவிட்ட விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல்  வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுகிறோம்.
 எனவே தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் தற்போது பணியிலுள்ள 12 ஆயிரம் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பணிநிரந்தரம் வழங்கி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி அனைவருக்கும் கல்வி இயக்க திட்டவேலையில் பணியமர்த்தியதை நிரந்தரப் பணியிடங்களாக்கி புதிய அரசாணையிட்டு அவரவர் பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்ஙனம்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர்  9487257203

13 comments:

  1. ஆமாய்யா. நாங்கள் பல ஆண்டுகளாக வேலையே இல்லாமல் தேர்ச்சி பெற்று இருக்கிறதாம்..

    ReplyDelete
  2. அந்த கூலிக்கு கூட வழி இல்லாமல், ஆண்டுக்கொரு தகுதிதேர்வெழுதி,தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் எங்களை போல் பலர்...

    ReplyDelete
  3. Sir six days work ku 7700 over thana exam eluthi pass pannavanga muttala....

    ReplyDelete
  4. exam pass panninavankala posting pannunka first.

    ReplyDelete
  5. Tet,trb eluthinavargai yosithu parungal,,,,,

    ReplyDelete
  6. எந்த டெட் எழுதினாலும் நீங்கள் மிகப்பெரிய திறமை மிக்கவரா இருந்தாலும் பட்டம் பல வாங்கி இருந்தாலும் தமிழ்நாட்டுல எந்த போஸ்ட் டும் போடவும் போறதில்ல. போட்டாலும் 7000 8000 தான் சம்பளம். இதை எதிர்த்து கேளுங்க திறமை மிக்கவர்களே . பகுதி நேரம்னு ஒரு போஸ்ட் உருவாக்கி அதனால் எங்களை வாழ்க்கை யை 8 வருடங்கள் தொலைத்து நொந்து போராடிக்கிட்டு இருக்கோம். எங்களை கேள்வி கேக்குறீங்க . எல்லாரோட வயித்துல யும் அடிக்கிற அரச கேட்க மாட்டேன் குறீங்க

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர ஆசிரியர்களும் திறமை மிகுந்தவர்கள்,,,,tet mathri avangalukum exam vachi,,,,,full time a mathi பணிநிரந்தரம் செய்யலாம்,,,,அரசு தான் முடிவுகள் sollanum.....kalvisethi la namba வாக்குவாதம் panna vendam,,,,,all teachers efficient

      Delete
  7. Why part time teachers were agreed "we will not ask permanant post in future"...நீங்க வேலைக்கு சேர்ந்த
    போது ஏன் பகுதி நெர ஆசிரியர் என ஒப்பந்தம் இட்டீர்கள்....
    அவனவன் TET 1& 2...பாஸ் பண்ணிவிட்டு காத்துகிடங்காக....
    தற்காலிக பணி வேறு...
    பகுதி நேர பணி வேறு....
    தற்காலிக பணி என்பது முழு நேர பணி...பகுதி நேர பணி என்பது வாரத்திற்கு 3 நாள் மட்டும் அதுவும் 3 மணி நேரம்தான் (காலை or மாலை மட்டும்).....தற்காலிக பணியாளர்களை கூட பணி நிரந்தரம் செய்யவே மிக கடினம்.....நன்றாக புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.....

    ReplyDelete
  8. அவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி